iPhone 16, iPhone 16 Plus - என்னென்ன புதிய அம்சங்கள்?
வாசிப்புநேரம் -
Apple நிறுவனம் நேற்று (20 செப்டம்பர்) அதன் புதிய iPhone 16, iPhone 16 Plus திறன்பேசிகளை வெளியிட்டது.
அவற்றில் என்னென்ன புதிய அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
🤳 புகைப்படக் கருவி: புகைப்படங்களை எடுக்கப் புதிய வழிகளைப் பயன்படுத்தலாம். தம்மைச் சுற்றியிருக்கும் பொருள்கள், இடங்களைப் பற்றி இன்னும் விரைவாக அறிவதற்குக் காட்சி நுண்ணறிவை உபயோகிக்கலாம். 48MP Fusion புகைப்படக் கருவி 2 புகைப்படக் கருவிகளின் ஆற்றலை ஒரு கருவியில் உள்ளடக்கியது.
🤳 A18 மின்கலன்: திறன்பேசியின் ஆற்றலை மேம்படுத்துகிறது. மின்கலனைப் பயன்படுத்தக்கூடிய நேரமும் அதிகரிக்கிறது.
📲 Apple Intelligence மென்பொருள் இலவசமாக வழங்கப்படுகிறது. அதில் பயனீட்டாளர்கள் தங்களது எழுத்துத் திறனை மேம்படுத்த புதிய கருவிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. தொலைபேசி அழைப்பை ஒருவர் ஒலிப்பதிவு செய்தால் மற்றவருக்கு அது தெரியவரும். அழைப்பு முடிந்தவுடன் Apple Intelligence அந்த அழைப்பில் பேசப்பட்டவற்றைச் சுருக்கி வழங்கும்.
📲 மின்னஞ்சல்களில் இடம்பெறும் முக்கியமான தகவல்கள் சுருக்கமாக வழங்கப்படும். சுருக்கமான அறிவிப்புகளும் வழங்கப்படும்.
புதிய iPhone 16, 16 Plus ஐந்து வண்ணங்களில் தயாரிக்கப்படுகின்றன.

ஆதாரம் : Others