Skip to main content
பழைய iPod கருவிகள் மீது மீண்டும் திரும்பும் ஆர்வம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

பழைய iPod கருவிகள் மீது மீண்டும் திரும்பும் ஆர்வம்

வாசிப்புநேரம் -
பழைய iPod கருவிகள் மீது மீண்டும் திரும்பும் ஆர்வம்

envato elements

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

iPod கருவி நினைவிருக்கிறதா? அது இப்போதைய இளையர்களிடையே மீண்டும் பிரபலம் அடைந்துவருகின்றது. Apple நிறுவனம் தனது iPod தயாரிப்பை நிறுத்திய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அதன் மறுவிற்பனை இணையத்தில் சூடுபிடித்து வருகிறது. அதற்கு அதன் பழைமையான தோற்றம் மட்டும் காரணம் அல்ல. செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம் போன்றவை தாங்கள் விரும்பிக் கேட்கும் பாடல்களைத் தேர்ந்தெடுப்பதைப் பல இளையர்கள் விரும்புவதில்லை. மேலும் தங்கள் கவனம் சிதறாமல் பாடல்களைக் கேட்க iPod கருவிகள் சிறந்தவை என்றும் அவர்கள் கருதுகின்றனர். திறன்பேசிகள் மீது சார்ந்திருப்பதைக் குறைக்கவும் சமூக ஊடகப் பதிவுகளில் எதிர்மறையான செய்திகளைத் தவிர்க்கவும்
iPod போன்ற தனி இசைக்கருவிகள் உதவுகின்றன என்று CCS Insight எனும் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் (Ben Wood) பென் ஊட் கூறுகிறார். இருபது ஆண்டுகளில் Apple நிறுவனம் 450 மில்லியன் iPod கருவிகளை விற்றிருப்பதால் அவற்றை எளிதாக இணையத்தில் பெற முடியும். எனினும் இப்போது iPod கருவிகளை வாங்க விரும்பினால் கொஞ்சம் எச்சரிக்கையும் தேவை. இணையச் சந்தையில் iPod கருவிகள் போலவே ஆயிரக்கணக்கான நகல் அல்லது போலிக் கருவிகளும் உள்ளன.

ஆதாரம் : AP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்