தினமும் ஒரே உணவைச் சாப்பிடுவது நல்லதா?
வாசிப்புநேரம் -
படம்: Envato Elements
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அன்றாடம் காலையில் விழித்தவுடன் என்ன சாப்பிடுவது என்று யோசிப்பது ஒருவகை பதற்றத்தை ஏற்படுத்தலாம்.
அதைச் சமாளிக்க சிலர் அதிகம் யோசிக்காமல் அன்றாடம் ஒரே வகை உணவைச் சாப்பிட நேரிடலாம்.
அதில் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு.
முதலில் ஒரே சாப்பாட்டைச் சாப்பிட்டால் நிச்சயம் சலிப்புத் தட்டும்.
நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியம்.
தினமும் பர்கர், ஃப்ரைஸ் (burger, fries) என்றால் பிரச்சினைதான்.
பதப்படுத்தப்பட்ட உணவை அளவுக்கு அதிகமாய்ச் சாப்பிடுவது உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
அதற்குப் பதிலாக உண்ணும் உணவில் புரதச்சத்து, மாவுச்சத்து, ஆரோக்கியமான கொழுப்பு உள்ளிட்டவை சரியான அளவில் இருப்பது அவசியம் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
காலையில் தயிருடன் பழங்கள்...
மதியம் சாலட் வகைகள் (salad)...
இரவு காய்கறிகளுடன் மீன் அல்லது கோழி...
இப்படிச் சாப்பிட்டால் ஒரே மாதிரியான உணவில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஆனாலும் ஒவ்வொரு நாளும் வேறு வகை உணவைச் சேர்த்துக்கொள்வதும் நல்லதுதான்.
இன்று ஆப்பிள், ஆரஞ்சு என்றால் நாளை வாழைப்பழத்துக்கு மாற்றிக்கொள்ளலாம்.
தினமும் தோசைதான் சாப்பிடவேண்டும் என்றால், அதையும் சற்று வகைவகையாகச் சுட்டுச் சாப்பிடலாம்.
நாள்தோறும் ஒரே உணவா என்பது கேள்வியல்ல...
தினமும் சரியான, சத்தான உணவா என்பதுதான் கேள்வி.

ஆதாரம் : Others/New York Times