Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல் செய்தியில் மட்டும்

கொதித்த நீரை மீண்டும் கொதிக்க வைக்கலாமா?

வாசிப்புநேரம் -
காலையில் காப்பி... மாலையில் தேநீர்...

சூடான பானங்கள் அருந்துவதைச் சிங்கப்பூரர்கள் அதிகம் விரும்புகின்றனர்.

பானங்களைத் தயாரிக்கத் தண்ணீரைக் கொதிக்க வைப்பது வழக்கம்.
(படம்: Envato Elements)
குழாயில் இருந்து வரும் நீரைக் கொதிக்க வைத்தபின் குடிக்கும் பழக்கத்தைக்கூடச் சில குடும்பங்கள் பின்பற்றுவது உண்டு.

சில சமயம் அதே நீரைச் சிறிது நேரம் கழித்துச் சிலர் மீண்டும் கொதிக்க வைக்கின்றனர்.
(படம்: Envato Elements)
அவ்வாறு செய்வது பாதுகாப்பானதா? கொதித்த நீரை மீண்டும் கொதிக்க வைக்கலாமா?

Shifa Clinic and Surgery மருந்தகத்தின் மருத்துவர் முகமது பைசலிடம் (Mohamed Baisal) கேட்டது 'செய்தி'.
(படம்: Envato Elements)
சிங்கப்பூரில் வீட்டுக் குழாயில் வரும் நீரை ஒருமுறை கொதித்தபின் மீண்டும் கொதிக்க வைப்பதால் பாதகம் இல்லை என்றார் அவர்.

நீரை நீண்ட நேரம் கொதிக்க வைப்பதாலும் கெடுதல் எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.

நீரைக் கொதிக்க வைக்கும்போது அதிகமான கிருமிகள் குவியும் என்ற நம்பிக்கை மக்களிடையே இருந்தாலும் அதனால் உடலுக்குத் தீங்கு ஏற்படாது என்று மருத்துவர் சொன்னார்.
(படம்: Envato Elements)
வீட்டுக் குழாயில் வரும் நீரைக் கொதிக்க வைக்காமலே குடிக்கலாம் என்கிறார் அவர்.

6 மாதங்கள் வரை நீரை வைத்திருந்து குடிக்கலாம், தவறில்லை.
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்