தூங்கும்போது செவி ஒலிக்கருவி அணிந்தால் என்ன ஆகும்?
வாசிப்புநேரம் -
(படம்: Envato Elements)
இரவில் தூங்கும்போது செவி ஒலிக் கருவி எனும் இயர்பட்ஸ் (earbuds) அணிவது பாதுகாப்பானதா?
தூக்கத்தைத் தூண்டும் இசை, தியான ஒலி அல்லது இரைச்சலைத் தவிர்க்கும் ஒலி ஆகியவற்றைக் கேட்பது சிலருக்கு உதவலாம் என New York Times வெளியிட்ட கட்டுரை கூறுகிறது.
ஆனால், காதுக்குள் நுழையும் ஒலிக்கருவி ஈரப்பதத்தை அடைத்து, பாக்டீரியா கிருமிகள் வளர ஏதுவாக இருக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதனால் காது தொற்று ஏற்படலாம் அல்லது காதுச் செருமி அதிகரிக்கலாம்.
காதில் வலி, அரிப்பு, திரவம் வெளியேறுதல், அல்லது கேட்கும் திறன் மங்கினால் மருத்துவரை அணுக வேண்டும்.
சத்தத்தின் அளவு மிதமிஞ்சிய அளவில் இல்லையெனில் எட்டு மணி நேரம் வரை கூட கேட்கலாம்.
ஆனால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இயர்பட்ஸ் பயன்படுத்தும்போது, ஒலி அளவைக் குறைவாக வைத்துக் கொள்ளுதல்; காதை முழுமையாக அடைக்காத கருவிகளைத் தேர்வு செய்தல் அல்லது speaker headbands, pillow speakers போன்ற காதில் பொருத்தத் தேவையில்லாத ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துதல் உதவியாக அமையும்.

ஆதாரம் : Others