"யாரும் நோய்வாய்ப்படக்கூடாது!" - உத்தரவிட்ட நகரம்
வாசிப்புநேரம் -
இத்தாலியின் பெல்காஸ்டுரோ (Belcastro) நகரில் வாழும் மக்கள் நோய்வாய்ப்படக்கூடாது என்று அந்நகர மேயர் உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவ உதவியை நாடும் நிலை, குறிப்பாக மருத்துவ அவசரநிலையை அவர்கள் தவிர்க்கவேண்டும் என்று மேயர் கூறியதாக CNN செய்தி நிறுவனம் தெரிவித்தது.
நகரில் சுகாதாரச் சேவைகளின் பற்றாக்குறையைக் குறிப்பிட்டு அத்தகைய உத்தரவைப் பிறப்பித்ததாக மேயர் சொன்னார்.
சுமார் 1,300 மக்கள் வசிக்கும் பெல்காஸ்டுரோவில் பாதிப்பேர் முதியவர்கள். அங்குள்ள மருத்துவமனை அடிக்கடி மூடப்பட்டிருக்கும். வாரயிறுதி நாள்கள், விடுமுறை நாள்கள், வேலை முடிந்த நேரத்திற்குப் பிறகு மருத்துவர்களின் உதவியை நாட முடியாது.
மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால் மருத்துவ உதவி பெற 45 கிலோமீட்டர் தூரம் செல்லவேண்டும்.
அத்தகைய நிலைமையில் நகரம் இருப்பதைக் குறிப்பிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மேயர் கூறினார்.
உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய, விபத்து ஏற்படக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கும்படி அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
வீட்டைவிட்டு அடிக்கடி வெளியே செல்லவேண்டாம், பயணம் செய்வது, விளையாட்டில் ஈடுபடுவதை முடிந்தவரை தவிர்க்கும்படியும் அவர் சொன்னதாக CNN தெரிவித்தது.

ஆதாரம் : CNN