Skip to main content
உயிரைப் பணயம் வைத்துப் பிறந்தநாள் கொண்டாடிய சாகச வீரர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உயிரைப் பணயம் வைத்துப் பிறந்தநாள் கொண்டாடிய சாகச வீரர்

வாசிப்புநேரம் -
ஒவ்வொருவரும் தங்கள் பிறந்தநாளை ஒவ்வொரு விதத்தில் கொண்டாடுவது வழக்கம்.

சிலர் அமைதியாகக் கொண்டாடுவர். சிலருக்கு ஆட்டம் பாட்டம் இல்லாமல் கொண்டாட்டம் நிறைவடையாது.

துபாயில் ஒரு சாகச வீரர் உயிரைப் பணயம் வைத்துப் பிறந்தநாள் கொண்டாடினார்.

குலை நடுங்கவைக்கும் சாகசத்துடன் 33 ஆம் வயதில் அடியெடுத்து வைத்தார் யான் ரோசே (Jaan Roose).

பலருக்கும் இது தலையைச் சுற்றவைக்கும் செயல்.

யான் ரோசேவுக்கோ இது கைவந்த கலை.

வானுயர்ந்த கட்டடங்களுக்கு இடையே கம்பியில் நீண்ட தூரம் நடந்துசெல்வதில் மூன்று முறை உலகப் பட்டம் வென்றவர் யான் ரோசே.

சுமார் 300 மீட்டர் உயரமுள்ள துபாயின் ஜுமெய்ரா எமிரேட்ஸ் (Jumeirah Emirates) கோபுரங்களுக்கு இடையே கம்பியில் நடந்து பிறந்தநாளைக் கொண்டாடினார்.

பிறந்தநாளில் மனத்துக்குப் பிடித்ததைச் செய்து முடித்த திருப்தியில் அடுத்த சாகசத்தைத் தேடிச் செல்கிறார் யான் ரோசே.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்