Skip to main content
'தனியாகச் சாப்பிடுவதில் பெருமை'
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல் trending

'தனியாகச் சாப்பிடுவதில் பெருமை' - தலையெடுக்கும் புதிய ரசனை

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சீனாவில் கூட்டமாக அமர்ந்து உணவருந்தும் வழக்கம் மாறி, தற்போது "தனிமை உணவு முறை" இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஜப்பானிய உணவகமான சுஷிரோ (Sushiro) இந்த மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

2024ல் பெய்ச்சிங்கில் (Beijing) உணவகம் திறக்கப்பட்டது.

1,500 மேசைகள் வரை மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.

ஷாங்ஹாயில் சிலர் 14 மணிநேரம் வரை காத்திருந்து உணவருந்தினர்.

நகரும் பட்டையின் வழி உணவுகள் தானாகவே மேசைக்கு வருகின்றன.

கணினித் திரை மூலமே உணவை ஆர்டர் செய்யலாம் என்பதால் தெரியாதவர்களிடம் பேச வேண்டிய அவசியம் இல்லை.

இது பலருக்கும் நிம்மதியைத் தருகிறது.

சீன இணையத்தளங்களில் பிறருடன் பேசத் தயங்கும் உள்முகச் சிந்தனையாளர்களை 'I-Person' என்று அழைக்கிறார்கள்.

இவர்களுக்கு அத்தகைய உணவகங்கள் ஒரு சொர்க்கமாகத் தெரிகின்றன.

முன்பு தனியாக அமர்ந்து உண்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகப் பார்க்கப்பட்டது.

ஆனால் இப்போது அது ஒரு பெருமைக்குரிய ஒன்றாகிவிட்டது.

உணவு பரிமாறப்படும்போது மட்டுமே திரை விலகும்.

இது சிலருக்குச் சிறைச்சாலை போலத் தோன்றினாலும் தனிமையை விரும்புவோர் இதுவே முழுமையான சுதந்திரம் என்கின்றனர்.

ஆதாரம் : South China Morning Post

மேலும் செய்திகள் கட்டுரைகள்