Skip to main content
ஜப்பானிய cheesecake என்றால் என்ன?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

ஜப்பானிய cheesecake என்றால் என்ன?

வாசிப்புநேரம் -
தயிர், பிஸ்கட்....இவற்றை வைத்து என்ன செய்ய முடியும்?

சீஸ்கேக்கைப் (cheesecake) போன்ற இனிப்பைத் தயாரிக்க முடியும்.

சமூக ஊடகத்தில் "Japanese Cheesecake" எனும் பெயரால் அது அழைக்கப்படுகிறது. பலர் பரவலாக அதை வீட்டில் செய்து பார்க்கின்றனர். இதுவரை 20,000 காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

எப்போது தொடங்கியது?

ஜனவரி 7ஆம் தேதி TikTok பிரபலம் ஸ்டான் ஃபுகாசே (Stan Fukase) தயிரில் தேங்காய் பிஸ்கட்டுகளை ஊற வைத்துச் சாப்பிடுவதைக் காணொளியாக எடுத்துப் பதிவிட்டார். அன்றிலிருந்து பலர் அவரைப் பின்பற்றத் தொடங்கினர்.

ஏன் பிரபலமானது?

பாலாடையைவிடத் தயிரில் புரதச்சத்து அதிகம் என்பதால் சுகாதாரத்தில் அக்கறை செலுத்துவோர் இடையே ஜப்பானிய சீஸ்கேக் பிரபலமானது.

தேங்காய் பிஸ்கட்டுகளுக்குப் பதிலாக Oreo, Biscoff ஆகிய பிஸ்கட்டுகளையும் மக்கள் பயன்படுத்துகின்றனர்.

ஜப்பானில் உருவாக்கப்பட்டதா?

பெயர் தான் ஜப்பானிய சீஸ்கேக். ஆனால் அது ஜப்பானில் உருவாக்கப்படவில்லை.
Related article image
படம்: Modern Asian Baking
ஜப்பானில் தயாரிக்கப்படும் சீஸ்கேக்கில் மற்ற சீஸ்கேக்களைப் போல் பாலாடைதான் பயன்படுத்தப்படும். அது மிருதுவாக இருக்கும்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்