மணப்பெண் கோலத்தில் மினுக்கும் உடற்கட்டழகி
வாசிப்புநேரம் -

படம்: Instagram/chitra_purushotham
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த உடற்கட்டழகி இணையத்தில் பிரபலமாகியுள்ளார்.
மணப்பெண் கோலத்தில் தசைகளைக் காட்டிய அவரின் காணொளி சுமார் 7.5 மில்லியன் முறை பார்வையிடப்பட்டுள்ளது.
காணொளியில் சித்ரா புருஷோத்தம் (Chitra Purushotham) காஞ்சிபுரம் பட்டுப் புடவையையும் நகைகளையும் அணிந்திருப்பதைக் காணமுடிகிறது.
புடவையுடன் சட்டை ஏதும் அணியாத அவருடைய கைகளின் தசை சிறிய குன்றுகள் போல் தோன்றுகின்றன.
"எல்லாம் மனப்பான்மையில்தான் உள்ளது,"என்று புருஷோத்தம் காணொளியில் குறிப்பிட்டார்.
இணையவாசிகள் பலர் அவரைப் பாராட்டினர்.
'அழகையும் வலிமையையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தமுடியாது என்று யார் சொன்னது?'
'ஒரு பெண் நளினமாகவும் வலிமையாகவும் இருக்கமுடியும் என்பதற்கு இது சான்று' என்று அவர்கள் கூறினர்.
பல்வேறு உடற்கட்டழகிப் பட்டங்களைப் பெற்ற புருஷோத்தம் விளம்பரத்துக்காக அவ்வாறு படமெடுத்ததாக The Hindustan Times ஊடகம் சொன்னது.

ஆதாரம் : Others