Skip to main content
தாமதமாக வந்தாலும் தரமான வசூல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

தாமதமாக வந்தாலும் தரமான வசூல் - 'கருப்பு' திரைப்படம்

வாசிப்புநேரம் -
தாமதமாக வந்தாலும் தரமான வசூல் - 'கருப்பு' திரைப்படம்

இணையத்திலிருந்து எடுக்கப்பட்ட படம்

திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான RJ பாலாஜியின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'கருப்பு' (Karuppu) திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் (Box Office) நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

நடிகர் சூர்யா, நடிகை திரிஷா கிருஷ்ணன், RJ பாலாஜி ஆகியோர் நடித்துள்ள அப்படம், தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் (13.37 மில்லியன் வெள்ளி) வசூலைக் குவித்துள்ளது.

ஒன்பது மாதங்களில் அவ்வளவு வசூலை ஈட்டிய முதல் தமிழ்ப் படமாக அது மாறியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை திரைக்குவந்த "கருப்பு" முதல் வார இறுதியில் மட்டும் ₹200 கோடி ரூபாய் (26.75 million வெள்ளி) வசூலைக் குவித்தது.

'வீரபத்ருடு' என்ற பெயரில் தெலுங்கிலும் அந்தப் படம் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

'கருப்பு' வெளிநாடுகளில் 60 கோடி ரூபாய் (8.02 மில்லியன் வெள்ளி) வசூலை ஈட்டியுள்ளது.

சென்ற ஆண்டு ஆகஸ்டில் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் வெளிவந்த 'கூலி' (Coolie) திரைப்படம் அத்தகைய வெற்றியைப் பெற்றது.

நிதிப் பிரச்சினையால் ஒருநாள் தாமதமாக மே 15 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது 'கருப்பு'

2026ஆம் ஆண்டில் இதுவரை அதிக வசூல் ஈட்டிய தமிழ்ப் படமாகவும், நடிகர் சூர்யாவின் அதிக வசூல் ஈட்டிய படமாகவும் அது திகழ்கிறது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்