Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உயிர்காக்கும் 69 வயது இந்திய மீனவர்

வாசிப்புநேரம் -
69 வயது மீனவர்.

அவரது பெயர் அப்துல் சலாம் டார் (Abdul Salaam Dar)

இந்தியாவின் காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த அவர்
கடந்த 30 வருடங்களில் ஆற்றில் மூழ்கவிருந்த 100க்கும் அதிகமானோரைக் காப்பாற்றியுள்ளார்.

அவர் மற்றவர்கள் ஆற்றில் தொலைத்த பொருள்களைக் கண்டுபிடிக்க உதவுவது வழக்கம்.

அப்படி உதவியபோது ஒருநாள், ஒருவர் ஆற்றில் மூழ்கியதைக் கண்டார். பலர் முயன்றும் அந்த நபரைக் காப்பாற்ற இயலவில்லை.

அது அவரைப் பெரிதும் பாதித்தது. அன்று முதல் அவர் பலரைக் காப்பாற்றி வருகிறார். ஆற்றில் மூழ்கியவர்களின் உடலை மீட்புக் குழுவினர் கண்டுபிடிக்கச் சிரமப்படும் வேளையில் உதவிக்கரம் நீட்டுவார்.

இதுவரை 47 சடலங்களை அவர் மீட்டுள்ளார்.

"நான் காப்பாற்றிய அனைவரின் முகமும் எனக்கு நன்கு நினைவிருக்கிறது. என்னைப் பலவீனமான கிழவன் என்றும் என்னால் எதுவும் செய்யமுடியாது என்றும் ஒருமுறை காவல் அதிகாரி கேலிசெய்தார். ஆனால் என்னால் முடியும் என்று நான் செய்து காட்டினேன்".

"அதிகாரிகளும் மக்களும் என்னைப் பாராட்டிப் பணமும் சன்மானமும் வழங்குவர். ஆனால் எனக்கு அதை ஏற்க மனமில்லை. அது இறந்தவர்களின் ஆன்மாவை விற்பதற்குச் சமம் என்பது என் நம்பிக்கை," என்கிறார் திரு டார்.
ஆதாரம் : Others/The Guardian

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்