Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சுற்றுச்சூழலை மேம்படுத்தச் சில எளிய வழிகள்

வாசிப்புநேரம் -

பருவநிலை குறித்த கவலை உண்டா?

உங்கள் அண்டை அயலார், உள்ளூர் வணிக நிறுவனங்களுடன் இணைந்து நீங்களும் சுற்றுப்புறத்தில் சிறு மாற்றத்தைக் கொண்டு வரலாம். 

அதற்கான சில எளிய வழிமுறைகள்:

1. பறவைகள், தேனீக்கள் குறித்த ஆய்வு 

  • இயற்கையுடன் நெருங்க நீங்களும் விஞ்ஞானியாகலாம்.
  • சுற்றுப்புறத்திலுள்ள பட்டாம்பூச்சிகள், பூச்சிகள், பூக்கள் உள்ளிட்டவற்றை கணக்கிடும் ஆய்வுப் பணிகளில் நீங்கள் பங்கேற்கலாம்.
  • அந்தத் தரவுகள் மனிதர்களின் நடவடிக்கை இயற்கை வாழ்விடங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் புரிந்துகொள்ள உதவும்.

2. குப்பைகள் சேகரித்தல் 

  • மண்ணும், தண்ணீரும் பூமியின் வளங்களில் முக்கியமானவை. 
  • குடியிருக்கும் பகுதியில் அவ்வப்போது குப்பைச் சேகரிக்க ஏற்பாடு செய்வதன் மூலம், எளிதில் மக்கிப்போகாத பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருள்கள் பூமியைப் சீரழிக்காமல் பாதுகாக்க முடியும்.

3. மீதமான உணவுப் பொருள்களை சமூகக் குளிர்பதனப் பெட்டி வாயிலாக பகிர்தல் 

  • சமூகக் குளிர்பதனப் பெட்டிகள் திட்டத்தின் வாயிலாக சுற்றுவட்டாரத்தில் உணவுப் பொருள்கள் விரயமாவதைத் தடுக்கலாம். சுற்றுப்புறத்தையும் பாதுகாக்கலாம். 

4.  பருவநிலை, இயற்கை குறித்த கலந்தாய்வுகள் நடத்தலாம் 

  • உங்கள் பகுதியில் பருவநிலை, இயற்கை குறித்த கலந்தாய்வுகளை நடத்தி இயற்கையைப் பாதுகாக்கத் தேவையான  நடவடிக்கைகளைப் பட்டியலிடலாம்.

5. சொந்தமாகப் பயிரிட்டு உண்ணலாம்  

  • இன்னும் அதிகமான காய்கறி செடிகளைப் பயிரிட்டு அவற்றிலிருந்து கிடைப்பதைச் சாப்பிடுவதன் மூலம் உள்நாட்டு  உணவு உற்பத்திக்கு உதவலாம்.
  •  வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள்களைத் தருவிப்பதால்  வாகனங்கள் மூலம் ஏற்படும் கரியமில வாயு வெளியேற்றத்தையும் குறைக்கலாம்.  

6. பொருள்கள் சேகரிக்க இடம் அமைத்தல்

  • தற்போது இணையம் வழியே பொருள்கள் வாங்குவதுதான் பிரபலம். அவ்வாறு சேரும் பொருள்கள் முதலில் உங்கள் வீடுகளை நிரப்பும்.
  • பின்னர் பூமியை நிரப்பும். எனவே சமையல் பொருள்கள் தொடங்கி பொம்மைகள் வரை குடியிருப்பாளர்கள் பகிர்ந்துகொள்ள ஓர் இடவசதியை ஏற்படுத்தலாம்.

7. ஆடைகளை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ளலாம்  

  • புதிய ஆடைகளை வாங்குவதற்குப் பதிலாக, ஆடைகளை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ளலாம்.
  • இதன் வழி பணத்தையும் மிச்சப்படுத்தலாம். பூமியையும் பாதுகாக்கலாம். 

8. மாசு இல்லாத தெருக்களை / சாலைகளை உருவாக்குதல் 

  • கார் மாசுபாட்டைக் குறைப்பதன் வழி கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க முடியும்.
  • அதன்மூலம் காற்றின் தரமும் மேம்படும்.
  • சைக்கிள் ஓட்டுவது மாசுபாட்டைக் குறைக்கும் சிறந்த வழிகளில் ஒன்று. எனவே சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கும் இயக்கங்களை நடத்தலாம்.

9. பருவநிலை நெருக்கடி நிலையம் தொடங்கலாம்

  • பிளாஸ்டிக் கழிவுகள் பற்றிய கண்காட்சிகளும்,  சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்வதற்கான பொருள்களை எவ்வாறு தயாரிப்பது என்பதற்கான பட்டறைகளையும் நடத்தலாம்.
     

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்