தூங்கி எழுந்தாலும் தீராத களைப்பு - நோய்க்கான அறிகுறியா?
வாசிப்புநேரம் -
படம்: Envato Elements
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஏதேனும் ஒருநாள் தாமதமாக உறங்கிவிட்டால் மறுநாள் மிகவும் களைப்பாக இருப்பது இயல்புதான்.
அடுத்த சில நாள்களுக்கு நன்றாக உறங்கிவிட்டால் அந்த அசதி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
ஆனால் இரவில் நன்றாக உறங்கிய பிறகும் எப்போதுமே களைப்பாக இருந்தால் அது நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தீராத களைப்பு என்னென்ன நோய்களுக்கு அறிகுறியாக இருக்கலாம்?
- புற்றுநோய்
மார்பகப் புற்றுநோய், புராஸ்டேட் (prostate) புற்றுநோய், சில வகை ரத்தப் புற்றுநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் ரசாயன மாற்றங்கள் ஏற்படும். அதனால் அவர்கள் எப்போதும் களைப்பாக இருப்பார்கள் என்று Cleveland Clinic இணையத்தளம் குறிப்பிடுகிறது.
- நீரிழிவு நோய்
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக அல்லது குறைவாக இருந்தால் உடலுக்குத் தேவைப்படும் போதிய அளவு சத்து கிடைப்பதில்லை. தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற காரணங்களாலும் நீரிழிவு நோயாளிகள் களைப்பாகக் காணப்படுவர் என்று Medical News Today இணையத்தளம் கூறுகிறது.
- தடுப்புச்சக்தி ஏற்படுத்தும் நோய்கள் (autoimmune diseases)
தடுப்புச் சக்தி ஏற்படுத்தும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போதிய அளவு நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாமல் போவதால் அவர்கள் எப்போதும் அசதியாக இருக்கும் சூழல் ஏற்படுகிறது.
- தூக்கமின்மை, மனநல பாதிப்பு
மனச்சோர்வு, தூக்கமின்மை ஆகியவற்றால் அவதியுறுவோர் போதிய உறக்கமின்றிச் சோர்வாகவே இருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
* களைப்பு தீராத நிலையில் மருத்துவரை எப்போது நாடவேண்டும்?
2 முதல் 4 வாரங்களுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கம், இரவு நன்றாக உறங்கும் வழக்கம் ஆகியவற்றைக் கடைப்பிடித்தபோதும் களைப்பு தீரவில்லை என்றால் மருத்துவரைக் காண்பது நல்லது என்கிறார் தேசியப் பல்கலைக்கழகப் பலதுறைமருந்தகங்களின் (National University Polyclinics) டாக்டர் ஸ்கய் கோ (Sky Koh).
அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்குபவர்களும் உடல்நலக்குறை உள்ளவர்களும் தீராத களைப்பு இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடுமாறு அவர் அறிவுறுத்தினார்.

ஆதாரம் : CNA