இன்று உலக தூக்க தினம் - ஒழுங்கான தூக்கம் இல்லாவிட்டால்?

Unsplash/Annie Spratt
நாள் முழுவதும் பரபரப்பாக உழைத்துக் களைத்து அந்த அசதியைப் போக்க தினந்தோறும் நாம் எதிர்பார்த்துக் காத்திருப்பது, இரவில் நிம்மதியாக நித்திரைகொள்ளும் அந்த நேரத்தை.
மார்ச் 14ஆம் தேதியான இன்று உலக தூக்க தினம்.
இவ்வாண்டிற்கான கருப்பொருள் "நல்ல ஆரோக்கியமான உறக்கத்திற்கு முக்கியத்துவம்"
அண்மைய ஆய்வொன்றின்படி சிங்கப்பூர் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட 43 நாடுகளில் 3ஆம் இடத்தில் உள்ளது.
முதல் இடத்தில் ஜப்பானின் தோக்கியோ (Tokyo) நகரமும், இரண்டாம் நிலையில் தென்கொரிய தலைநகரம் சோலும் (Seoul) உள்ளன.
தினமும் நீண்டநேரம் வேலை செய்வதும், அன்றாட வாழ்வின் அழுத்தங்களின் தாக்கமும் சிங்கப்பூரர்கள் தூக்கமின்றி அவதியுறக் காரணங்களாக உள்ளன.
தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?
1. அசதியின் காரணமாக வேலையிடத்தில் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலைகள் அதிகரிக்கலாம்.
2. கவனக்குறைவும் முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றமும் ஏற்படலாம்.
3. இதய நோய், மாரடைப்பு, இதயச் செயலிழப்பு, பக்கவாதம், நீரிழிவு நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் கூடும்.
4. மனச்சோர்வினால் பாதிக்கப்படலாம்.
5. உடல் எடை அதிகரிக்கலாம்
இரவில் நன்றாக உறங்குவதற்கு என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
விடை அறிய தூக்கமின்மை பற்றிய 'செய்தி'யின் காணொளித்தொடரைக் காணத் தவறாதீர்கள்.