Skip to main content
இடிபாடுகளுக்கு மத்தியில் இசை...
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

இடிபாடுகளுக்கு மத்தியில் இசை...

வாசிப்புநேரம் -
இடிபாடுகளுக்கு மத்தியில் இசை...

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

லெபனானியத் தலைநகர் பெய்ரூட்டில் (Beirut)...

சிதைந்துகிடக்கும் கட்டடங்களின் இடிபாடுகளுக்கு மத்தியில்...

செல்லோ (Cello) இசைக்கருவியை வாசித்தார் கலைஞர் மாஹ்டி சஹேலி (Mahdi Sahely).

அண்மையில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தொடங்கியதில் இஸ்ரேல் அருகிலிருக்கும் லெபனானும் சிக்கியது.

தென் லெபனான், குறிப்பாக பெய்ரூட்டில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதில் பலர் உயிரிழந்தனர் அல்லது காயமுற்றனர். மேலும் பலர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறிவிட்டனர்.

பரபரவென இருந்த பெய்ரூட் தற்போது அமைதியாக இருக்கிறது.

திரு சஹேலி இடிபாடுகளில் அமர்ந்து நிதானமாகச் செல்லோ வாசிப்பதைக் காணொளியாக எடுத்துத் தமது Instagram பக்கத்தில் பதிவிட்டார்.

அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பரவுகிறது.

காணொளி நகரவாசிகளின் துக்கத்தைப் பிரதிபலிப்பதாகப் பலர் பதிவிட்டனர்.

வேறு சிலர் எத்தகையை சூழ்நிலையாக இருந்தாலும் மக்கள் விடாமல் மன தைரியத்துடன் செயல்படுவதைக் காணொளி சுட்டுவதாகக் குறிப்பிட்டனர்.

ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்