Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

100 ஆண்டுகளுக்குப் பிறகு நூலகத்தில் திருப்பிக் கொடுக்கப்பட்ட இரவல் புத்தகம்

வாசிப்புநேரம் -
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள St. Helena பொது நூலகம் 100 ஆண்டுகளுக்கு முன்னர் இரவல் வாங்கப்பட்ட புத்தகத்தை மீண்டும் பெற்றுள்ளது.

புத்தகத்தின் பெயர் "A History of the United States".

அதனைப் பென்சன் லோஸிங் (Benson Lossing) எனும் அமெரிக்க வரலாற்று எழுத்தாளர் 1881 இல் வெளியிட்டார்.

அப்புத்தகத்தின் பிரதி 1927ஆம் ஆண்டு சம்பந்தப்பட்ட நூலகத்திலிருந்து இரவல் பெறப்பட்டது.

அந்த ஆண்டு பிப்ரவரியில் அதனைத் திருப்பிக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை.

புத்தகத்தை அண்மையில் ஓர் ஆடவர் நூலகத்தில் திரும்ப ஒப்படைத்தார்.

புத்தகம் தாமதமாக ஒப்படைக்கப்பட்டதற்கு அபராதம் விதிக்கப்பட்டதா?

பொதுவில் தாமதமாக ஒப்படைப்படும் புத்தகங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஆனால் 2019ஆம் ஆண்டுமுதல் இந்த நூலகத்தில் அந்நடைமுறை நீக்கப்பட்டுவிட்டது.

ஒருவேளை அது நடப்பில் இருந்திருந்தால் நாளொன்றுக்கு 5 காசு என்ற அடிப்படையில் சம்பந்தப்பட்டவருக்கு 1,756 டாலர் ( 2,370 வெள்ளி) அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம்.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்