Skip to main content
தன்னம்பிக்கையை இழந்த பெண்; புத்துணர்வு அளித்த நாய்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல் trending

தன்னம்பிக்கையை இழந்த பெண்; புத்துணர்வு அளித்த நாய்

வாசிப்புநேரம் -
தன்னம்பிக்கையை இழந்த பெண்; புத்துணர்வு அளித்த நாய்

படம்: Envato

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பிரிட்டனில் 66 வயது லிண்டா ஸ்மித் (Linda Smith) காது கேட்கும் திறனை முழுமையாக இழந்துவிட்டார். அதன் காரணமாக அவரது தன்னம்பிக்கை குறைய ஆரம்பித்தது.

இருபது வயதிலிருந்தே அவரது செவிப்புலன் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. சில சமயம் அறிகுறி இல்லாமல் தடுமாறி கீழே விழுந்தார்.

அன்றாட வாழ்க்கை மிகக் கடினமாக இருந்ததாக லிண்டா சொன்னார். ஆனால் அவர் வாழ்க்கையில் டொஃபி (Toffee) எனும் நாய் கால்பதித்த பிறகு வாழ்க்கை சுவாரஸ்யமானது.

டொஃபி அலாரங்கள் போன்ற உயிர்காக்கும் ஒலிகளைப் பற்றி எச்சரிக்க முடியும் என்று நம்பிக்கை கொண்டார் லிண்டா. அதனால் தற்போது செவிப்புலன் கருவி பொருத்தாமல் நிம்மதியாக உறங்க முடிவதாக BBC செய்தி நிறுவனத்திடம் அவர் கூறினார்.

தினசரி ஒலிகளைக் கேட்க முடியாததால் முன்னர் 24 மணிநேரமும், உறங்கும்போதும்கூட, செவிப்புலன் கருவியைப் பயன்படுத்த நேரிட்டதாக லிண்டா தெரிவித்தார்.

கழுத்தின்மீது கருவி அழுத்தியதால் அவரது தூக்கம் பாதிக்கப்பட்டது. பொருள் வாங்கச் செல்வதும் நடைப்பயிற்சி செய்வதும் லிண்டாவிற்குச் சவாலாக அமைந்தது.

அடிப்படை ஆதரவுக்கு அப்பால் டொஃபி தமக்கு தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது, நீண்டகாலத்திற்கு அனுபவிக்காத ஆனந்தத்தை அளித்துள்ளது என்று லிண்டா BBCஇடம் சொன்னார்.

வழிகாட்டி நாய்கள் அடிப்படை ஆதரவு, துணை, உலகத்துடனான உறவு ஆகியவற்றை வழங்குவதாகக் கூறப்படுகிறது.

ஆதாரம் : Others/BBC

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்