Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

"உருவம் சிறிது, இதயம் பெரிது"- பூனைக்குட்டிகளை வெள்ளத்திலிருந்து காப்பாற்றிய சிறுவனுக்குப் பாராட்டு

வாசிப்புநேரம் -
"உருவம் சிறிது, இதயம் பெரிது"- பூனைக்குட்டிகளை வெள்ளத்திலிருந்து காப்பாற்றிய சிறுவனுக்குப் பாராட்டு

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்

தாய்லந்தின் தெற்குப் பகுதியில் சென்ற வாரம் ஏற்பட்ட வெள்ளத்தின்போது ஒரு காட்சி பார்ப்போர் மனத்தை உருக்கியது.

ஒரு சிறுவன் மூன்று பூனைகுட்டிகளுடன் முழங்கால் அளவு தண்ணீரைக் கடந்து செல்வதைக் காட்டுகிறது அந்தக் காட்சி.

சிறுவன் முழுவதும் நனைந்திருக்கிறான். இருந்தாலும் தன்னலம் கருதாமல் பூனைக்குட்டிகளைப் பத்திரமாகக் கொண்டு செல்கிறான். பத்திரமான இடத்துக்குச் சென்று, பின் பூனைக்குட்டிகளைக் கீழே விடுகிறான்.

இதைக் கண்ட இணையவாசிகள் உருகிப் போயினர். படத்தையும் காணொளியையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.

"சிறுவனாக இருந்தாலும் பெரிய இதயம் படைத்தவன்" என்று புகழ்ந்தனர்.

உலகில் மனிதநேயம் இன்னமும் இருக்கிறது என்பதை இத்தகைய செயல்கள் காட்டுகின்றன என்று நெகிழ்ந்தனர் பலர்.

பலரும் அந்தச் சிறுவனுக்கு தங்கள் நன்றிகளைத் தெரிவித்தனர்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்