Skip to main content
உலகெங்கும் கல்லீரல் புற்றுநோய் இரட்டிப்பாகலாம் : ஆய்வு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

உலகெங்கும் கல்லீரல் புற்றுநோய் இரட்டிப்பாகலாம் : ஆய்வு

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உலகம் முழுவதும் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 2050ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட இரட்டிப்பாகிவிடும் என்று புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.

உடற்பருமன், மது அருந்துதல், கல்லீரல் அழற்சி (hepatitis) உள்ளிட்ட காரணங்களால் கல்லீரல் புற்றுநோய்ச் சம்பவங்கள் அதிகரிப்பதாக அது குறிப்பிட்டது.

கல்லீரல் புற்றுநோய்க்கு ஆளாகும் ஐவரில் மூவருக்கு அது வராமல் தடுப்பது சாத்தியம் என்றும் அது சொன்னது.

உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறினால், கல்லீரல் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை ஆண்டுக்கு 870,000லிருந்து 1.52 மில்லியனுக்கு அதிகரிக்கலாம்.

Lancet மருத்துவ சஞ்சிகையில் வெளியான Global Cancer Observatory ஆய்வில் அந்தத் தகவல்கள் அடங்கியுள்ளன.

கல்லீரல் புற்றுநோய் தொடர்பில் உலகம் முழுவதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

அதை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்