Skip to main content
தனிமையில் வாடிய புற்றுநோயாளிக்குக் கிடைத்த ஆயிரம் உறவுகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல் trending

தனிமையில் வாடிய புற்றுநோயாளிக்குக் கிடைத்த ஆயிரம் உறவுகள்

வாசிப்புநேரம் -
சீனாவின் குவாங்டாங் (Guangdong) மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் லி.

இவர் ஒரு அரிய வகை ரத்தப் புற்றுநோயுடன் போராடி வருகிறார்.

நான்கு கட்ட ரசாயன சிகிச்சைக்குப் (Chemotherapy) பிறகு அவரது உடல்நிலை சீராக இருந்தாலும் மருத்துவமனையில் தனிமையின் பிடியில் அவர் சிக்கியிருந்தார்.

தந்தையின் பணிச்சுமை...

தம்பியின் கல்விப்பயிற்சி...

மருத்துவமனையில் துணையின்றி தவித்த லி புதுமையான முயற்சியை மேற்கொண்டார்.

உணவு விநியோகச் செயலி மூலம் எவ்வித உணவையும் ஆர்டர் செய்யவில்லை.

"யாராவது இரண்டு மணி நேரம் என் படுக்கை அருகில் அமர்ந்து என்னுடன் பேசுங்கள்" என்ற வினோதக் கோரிக்கையை முன்வைத்தார்.

லியின் இந்தக் கோரிக்கை ஒரு மாபெரும் நெகிழ்ச்சிப் பயணமாக மாறியது.

லியின் நிலையை அறிந்த முதல் விநியோக ஊழியர் அதனைத் தனது சக ஊழியர் குழுவில் பகிர்ந்தார்.

பல ஊழியர்கள் தங்கள் பணி நேரம் முடிந்ததும் பால், தின்பண்டங்கள், பொம்மைகள், புத்தகங்களுடன் லியைப் பார்க்கச் செல்லத் தொடங்கினர்.

அமைதியாக, யாரிடமும் பேசாமல் இருந்த லி புதிய நண்பர்களின் வரவால் உற்சாகமடைந்தார்.

"இவர்களின் தன்னலமற்ற அன்பு என்னை நெகிழச் செய்துவிட்டது," என லி கண்ணீருடன் தெரிவித்தார்.

லியின் உடல்நிலையிலும் மனநிலையிலும் முன்னேற்றம் ஏற்பட்டது.

அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

தற்போது அடுத்தக்கட்ட சிகிச்சைக்காகக் காத்திருக்கிறார்.
ஆதாரம் : South China Morning Post

மேலும் செய்திகள் கட்டுரைகள்