Skip to main content
காதல் பாதையில் ஒப்பனைக் கடை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

காதல் பாதையில் ஒப்பனைக் கடை - வரவேற்கும் இணையவாசிகள்

வாசிப்புநேரம் -

காதலரைச் சந்திக்கச் செல்லும்போது பார்க்க அழகாக இருக்க வேண்டுமென்று பெண்கள் நினைப்பது இயல்பு.

அவர்களுக்காகவே சீனாவில் ஒரு பெண் ரயில் நிலையத்தில் ஒப்பனைக் கடையைத் திறந்திருக்கிறார். 

அது தற்போது சீனாவின் சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறது.

டெங் ஸிசி (Deng Qiqi) சீனாவின் சொங்சிங் (Chongqing) நகரில் உள்ள ரயில் நிலையத்தில் வியாபாரத்தைத் தொடங்கினார்.

2 மணி நேரத்தில் அவர் 54 வெள்ளி (300 யுவான்) சம்பாதிக்க முடிவதாகச் சொன்னார்.

கடந்த மாதம் (பிப்ரவரி) 14ஆம் தேதி அவருடைய வர்த்தகத்தின் முதல் நாள் என்று Shandian செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

மாலை 5 மணி முதல் 7.30 மணி வரை அவருடைய சேவையைப் பெறலாம்.

வார நாளில் மட்டும் டெங் கடையைத் திறந்திருப்பார்.

வாரயிறுதியில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க அந்த ஏற்பாடு.

வேலை முடிந்து காதலரைச் சந்திக்கச் செல்லும் பெண்களை மனத்தில் வைத்து வர்த்தகத்தைத் தொடங்கியதாக டெங் சொன்னார்.

சிலர் வேலைக்கு ஒப்பனை அணிந்து செல்வர்.

ஆனால் நாள் முடிவதற்குள் அது அழிந்துவிடும்.

ஒப்பனைத் துறையில் 10 ஆண்டு அனுபவம் கொண்ட அவர் சாதாரண ஒப்பனையை மட்டும் அந்தச் சின்னக் கடையில் போட்டுவிடுவதாகக் கூறினார்.

பெரிய அளவில் ஒப்பனையை நாடுவோர் நேரடியாக அவருடைய நிரந்தரக் கடைக்குச் செல்லலாம் என்று டெங் சொன்னார்.

அவருடைய வர்த்தகத்தைப் பார்த்து இணையவாசிகள் சமூக ஊடகங்களில் கருத்துரைக்கின்றனர்.

பெண்களுக்கு இது பெரும் உதவியாக இருப்பதாக அவர்கள் கூறினர்.

ஆதாரம் : South China Morning Post

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்