Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மலேசியாவில் அருகிவரும் மலாயாப் புலிகள்

வாசிப்புநேரம் -
மலேசியாவில் அருகிவரும் மலாயாப் புலிகள்

(படம்: AFP/Jimin LAI)

மலேசியாவில் அண்மையில் அதிகமான மலாயாப் புலிகள் மாண்ட சம்பவங்களைத் தொடர்ந்து அவை அருகிவரும் ஆபத்து நிலவுகிறது.

மலேசியாவின் அடையாளச் சின்னமாக விளங்கும் விலங்கு மலாயாப் புலி.

புலிகள் அருகிவரும் அபாயத்தில் இருப்பது அந்நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் 'தேசிய நெருக்கடி' என்று அதிகாரிகள் சிலர் கருதுவதாக அமெரிக்காவின் CNN செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஒரு காலத்தில் மலேசியக் காடுகளில் 3, 000 புலிகள் சுற்றித் திரிந்தன.

இப்போது 150 புலிகள் மட்டுமே வனப்பகுதிகளில் எஞ்சியிருப்பதாக நம்பப்படுகிறது.

காடுகள் அழிக்கப்படுவதால் புலிகளின் வசிப்பிடம் சுருங்கிக் கொண்டே போகிறது. மான்களும் மற்ற விலங்குகளும் குறைந்துவருவதால் புலிகளுக்குச் சாப்பாட்டுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதெல்லாம் போதாது என்று வேட்டைகள் தொடர்கின்றன.

அந்நாட்டில் சாலை விபத்துகளுக்குப் பலியாகும் புலிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

மலேசியாவில் 1950களில் சுமார் 3,000 புலிகள் இருந்ததாக CNN சொல்கிறது.

2020இல் வெளியான தேசியப் புலிகள் பாதுகாப்புச் செயல் திட்டத்தில் மலாயாப் புலிகளைப் பாதுகாக்கச் சில வழிகளை அதிகாரிகள் வரைந்தனர்.

அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களும் ஆதரவு தர வேண்டும். அப்போதுதான் புலிகளைக் காக்கலாம் என்று வனவிலங்கு அதிகாரிகள் தயாரித்த அறிக்கை கூறுகிறது.
ஆதாரம் : CNN

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்