Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

"இன்னல்களையும் தோல்விகளையும் சமாளிக்க மனோதிடம் வேண்டும்!" - சீனாவில் தடைகளைக் கடந்துவந்த ஆடவர்

வாசிப்புநேரம் -
"இன்னல்களையும் தோல்விகளையும் சமாளிக்க மனோதிடம் வேண்டும்!" - சீனாவில் தடைகளைக் கடந்துவந்த ஆடவர்

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்

சீனாவைச் சேர்ந்த வாங் (Wang) பட்டப்படிப்பை மேற்கொண்டிருக்கும் வேளையில் தின்பண்டங்களையும் விவசாயம் சார்ந்த பொருள்களையும் பழைய புத்தகங்களையும் விற்று 144,000 அமெரிக்க டாலர் சம்பாதித்துள்ளார்.

அவரது கதை வெளிவந்தவுடன் மாணவர்கள் சுயமாகத் தொழிலை நடத்தலாமா என பலர் கேட்டிருந்ததாக SCMP செய்தி நிறுவனம் கூறியது.

சீனாவின் செங்டுவிலுள்ள சீச்சுவான் பல்கலைக்கழகத்தில் பயின்ற அவர் படிக்கும்போதே சுயமாகத் தொழில் நடத்தியதாகச் சமூக ஊடகத் தளங்களில் பகிர்ந்தார்.

பல்கலைக்கழகத்தில் படித்தபோது அவர் மூன்றாவது ஆண்டிலேயே சொந்த நிறுவனத்தை ஆரம்பித்ததாக SCMP செய்தி நிறுவனம் கூறியது.

சீச்சுவான் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அவர் மேற்படிப்பைத் தொடர்ந்தார்.

கிராமப்புறத்திலிருந்து வந்து சுயமாகத் தொழில்செய்து படிப்பை மேற்கொண்ட அவரது கதை பலருக்கு ஊக்கமளித்தது.

இருந்தாலும் அதனால் சர்ச்சை எழுந்தது.

அவர் சிலருடன் சேர்ந்துதான் பணம் சம்பாதித்ததாக மார்ச் 6ஆம் தேதி விளக்கம் தந்தார்.

"எல்லாருமே சுயமாகத் தொழில்செய்யவேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்குப் புத்தாக்கச் சிந்தனை இருப்பது அவசியம்," என்றார் வாங்.

பல இன்னல்களையும் தோல்விகளையும் சந்தித்த அவர் ஒரு நிறுவனத்தை நடத்த எந்தச் சவாலையும் சமாளிக்கும் மனோதிடம் வேண்டும் என வலியுறுத்தியதாக SCMP செய்தி நிறுவனம் சொன்னது.

Douyin பக்கத்தில் அவரது கதையைப் படித்த இணையவாசிகள் பலர் அவருக்குப் பாராட்டுமழை பொழிந்தனர்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்