காரைப் பிரிய மனம் வராமல் தயங்கிய ஆடவர்
எப்படிக் கைத்தொலைபேசிக்கு ஏதாவது ஆகிவிட்டால் நம்மில் பலருக்கு மனம் கலங்கிவிடுமோ பலர் கார்கள் மீதும் அதே நேசத்தை வைத்திருப்பதுண்டு.
சிங்கப்பூரில் காரைப் பிரிய நேரிட்ட ஒருவரின் வேதனையைக் காட்டும் காணொளி TikTok தளத்தில் பரவலாகப் பகிரப்பட்டது.
காணாளியில் ஆடவர் காரைச் சுற்றி வருகிறார்...
அவர் சக்கரம் மீது கை வைக்கிறார்...
காருக்குமேல் தலையை வைத்தவாறு சிறிது நேரம் கழிக்கிறார்...
காரின் பின்பகுதி மீது கை வைக்கிறார்...
அவர் கண்களிலிருந்து கண்ணீர் சிந்துகிறது.
காணொளியைப் பதிவேற்றம் செய்த ஆடவரின் மனைவி வாகன உரிமைச் சான்றிதழ் காலாவதியானதாகச் சொன்னார்.
காணொளி சுமார் 3.4 மில்லியன் முறை பார்வையிடப்பட்டது.
காணொளியைக் கண்ட பலர் தங்களுக்கு அந்த வேதனை புரிவதாகக் கூறினர்.