Skip to main content
வாழ்க்கையை மாற்றிய தாளம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

வாழ்க்கையை மாற்றிய தாளம்

வாசிப்புநேரம் -
வாழ்க்கையை மாற்றிய தாளம்

CNA/Liew Zhi Xin

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரைச் சேர்ந்த மேளக் கலைஞர் (Er Chow Kiat) எர் சௌ கியாட்டுக்குப் பள்ளிப்பருவம் சவாலான காலம்.

படிப்பு அவருக்குச் சிரமமாக இருந்தது.

அதனால் தாம் புத்திசாலி இல்லையோ என்று நினைக்கத்தூண்டியது.

14 வயதில் டிரம்ஸ் கருவி வாசிக்கத் தொடங்கியபின் இசை அவரது வாழ்க்கையைப் புதிய திசையில் கொண்டுசென்றது.

இன்று 36 வயதாகும் அவர் ஒரு நிமிடத்தில் ஆக அதிகமான (spin-and-strike)“ஸ்பின்-அண்ட்-ஸ்ட்ரைக்” மேளதாளங்களை வாசித்ததற்காக கின்னஸ் உலகச் சாதனை படைத்துள்ளார். 60 விநாடிகளில் அவர் 233 (beats) தாளங்களை வாசித்திருக்கிறார்.

சி.கே. அல்லது சௌ என்று அறியப்படும் அவர் 2016-ஆம் ஆண்டு 'டிரம் டியூட்டர் சிங்கப்பூர்' என்ற பள்ளியைத் தொடங்கினார்.

முதலில் தெம்பனீஸில் உள்ள அவரது பெற்றோரின் வீட்டில் சுமார் 30 மாணவர்களுடன் அது இயங்கியது.

இப்போது அது சிங்கப்பூர் முழுவதும் ஐந்து கிளைகளாக வளர்ந்து 20 ஊழியர்களுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கிறது.

இலக்கில்லாமல் சென்ற வாழ்க்கைக்கு இசை ஓர் அர்த்தம் கொடுத்ததாக சௌ கூறுகிறார்.

இப்போது மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் திகழ்கிறார்.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்