Skip to main content
"பெட்ரோல் விலை உயர்ந்தது... பொம்மை காரில் செல்கிறேன்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல் trending

"பெட்ரோல் விலை உயர்ந்தது... பொம்மை காரில் செல்கிறேன்"

வாசிப்புநேரம் -
"பெட்ரோல் விலை உயர்ந்தது... பொம்மை காரில் செல்கிறேன்"

REUTERS/Jayla Whitfield-Anderson

எண்ணெய், எரிபொருள் விலை உயர்ந்து வருவது உலகமெங்கும் உள்ளவர்களுக்குக் கவலை அளித்துவருகிறது.

அதிகரிக்கும் செலவுகளைச் சமாளிப்பது எப்படி என்று தெரியாமல் பலரும் தவிக்கும் வேளையில் அமெரிக்கர் ஒருவரின் வித்தியாசமான முயற்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

30 வயது மாலி ஹைடவர் (Mali Hightower) ஜார்ஜியா (Georgia) மாநிலத்தைச் சேர்ந்தவர்.

குப்பையில் வீசப்பட்ட பழைய இளஞ்சிவப்பு வண்ண Barbie பொம்மை கார் ஒன்றை அவர் கண்டெடுத்தார்.

மின்கலன் கொண்டு இயங்கிய அதில் சுமார் 7.5 லிட்டர் பெட்ரோல் அடங்கக்கூடிய சிறிய இயந்திரத்தைப் பொருத்தினார்.

கயிறு ஒன்றை இழுப்பதன் மூலம் இயங்கும் வகையில் அந்தப் பொம்மை காரை மாற்றியமைத்தார்.

அவரது சொந்த மெசர்டிஸ் பென்ஸ் (Mercedes-Benz) காரை ஒட்டுவதற்குப் பதில் அவ்வப்போது அந்தப் பொம்மை காரைச் சாலையில் ஓட்டுவதாய் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

காரணம்?

பென்ஸ் காருக்குப் பெட்ரோல் நிரப்பும் செலவு - 90 டாலர் (சுமார் 115 வெள்ளி)

Barbie  காருக்குப் பெட்ரோல் நிரப்பும் செலவு - 3 டாலர் (சுமார் 3.80 வெள்ளி)

"பெட்ரோல் விலை அதிகரித்துவிட்டது, எப்படியாவது செலவைக் குறைக்கவேண்டும். அதனால் இந்தக் குட்டிக் காரைச் செய்தேன்," என்று ராய்ட்டர்ஸ் செய்தி  நிறுவனத்திடம் சொன்னார்.

"இதுபோன்ற குட்டிக் கார்கள் செய்வது எளிது. சாதாரணக் கார்களைப் போல் இவற்றிலும் விளக்குகள், வானொலி எனப் பல அம்சங்களையும் பொருத்திக்கொள்ளலாம்," என்றார்.

ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்