கையில் ஒரு கேமரா... திரைப்படம் தயார்!
வாசிப்புநேரம் -
படம்: AP Photo/Jake Coyle
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
நியூயார்க் (New York) தெருக்கள்.
கையில் ஒரு கேமரா.
கண்ணில் படுவதையெல்லாம் பதிவு செய்தபடி நடக்கிறார் ஜான் வில்சன் (John Wilson).
கடைப் பலகைகள், சாலைக் குழிகள், வழிப்போக்கர்கள்...
மற்றவர்கள் கடந்து செல்லும் சாதாரணக் காட்சிகளே 39 வயது திரு வில்சனுக்குக் கதைகள்.
அந்தப் பார்வையில் உருவானது அவரது முதல் முழுநீளப் படம் ‘தி ஹிஸ்டரி ஆஃப் கான்கிரீட்’ (The History of Concrete).
வீட்டின் அடித்தளத்தில் வெள்ளம் ஏற்பட்டதே படத்தின் தொடக்கம்.
பின்னர் கான்கிரீட் வழியாக மனிதர்கள், நகர வாழ்க்கை, படைப்பாற்றல் எனக் கதை விரிகிறது.
ஒரே திரையரங்கில் முதலில் வெளியான படம், வார இறுதியில் 90,000 அமெரிக்க டாலர் வசூலித்தது.
திரு வில்சன் 42 இருக்கைகள் மட்டுமே கொண்ட ‘லோ சினிமா’ (Low Cinema) திரையரங்கையும் நடத்துகிறார்.
அவரது அணுகுமுறை எளிது - மற்றவர்கள் கவனிக்காததைப் பார்ப்பது.
அதிலிருந்து ஒரு கதையைக் கண்டுபிடிப்பது.
“ஒரு திரைப்படம் நாம் விரும்பும் எதுவாகவும் இருக்கலாம். அதுதான் அதில் இருக்கும் மகிழ்ச்சி,” என்றார் திரு வில்சன்.

ஆதாரம் : AP