வாழ்வியல் trending
தீக்குள் குதித்த ஆடவர் நனைகிறார்... பாராட்டு மழையில்
(படம்: pixabay/pexels)
This audio is generated by an AI tool.
சீனாவில் கொளுந்துவிட்டு எரியும் தீக்குள் குதித்த ஒருவர் பாராட்டு மழையில் நனைகிறார்.
ஆன் எர்பே (An Erpei) எனும் ஆடவர் ஒரு முறை மட்டுமில்லை மூன்று முறை தீக்குள் குதித்தார்.
தீயை அணைக்க...
ஹங்சோ (Hangzhou) நகரில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் சென்ற மாதம் 25ஆம் தேதி தீப்பிடித்ததாக South China Morning Post ஊடகம் கூறியது.
கட்டடத்திலிருந்து தப்பியோடிய ஆன் திரும்பிப் பார்த்தார்.
வீடு ஒன்று தீயில் எரிந்துகொண்டிருந்தது.
அதை நெருங்கத் தீயணைப்பாளர்கள் முனைகின்றனர். ஆனால் புகை சூழ்ந்திருந்தது.
முன்னாள் தீயணைப்பாளரான ஆன் உதவ விரைந்தார்.
அவர் கையில் தீயணைப்பானுடன் வீட்டுக்குள் சென்றார்.
குளிர்சாதனத்திலிருந்து தீ பரவுவதையும் ஆன் அறிந்தார்.
தீயணைப்பான் தீர்ந்துவிட்டபின் ஆன் வீட்டிலிருந்து வெளியேறி இன்னொரு தீயணைப்பானுடன் வீட்டுக்குள் சென்றார்.
அவ்வாறு ஆன் புதிய தீயணைப்பான் பெற மூன்று முறை வெளியே சென்றார்.... மூன்று முறை தீக்குள் நுழைந்தார்.
ஆன் 10 நிமிடங்களில் தீயை அணைத்தார். மறுவிநாடி அவர் மயக்கம்போட்டுக் கீழே விழுந்ததாக South China Morning Post கூறியது.
ஆனின் துணிச்சலான செயல் பலருக்குத் தெரியவந்தது.
அவரின் முதலாளியின் கவனத்துக்கும் சென்றது.
முதலாளி ஆனின் சிகிச்சைக்கான செலவை ஏற்றுக்கொண்டார்.
அவருக்கு வெகுமதியும் அளித்ததாக South China Morning Post சொன்னது.