வாழ்வியல் trending
பசி வந்தால் பத்தும் பறக்கும்... ஆனால் கதவு திறக்காது!
வாசிப்புநேரம் -
பசி வந்தால் பத்தும் பறந்துவிடும் என்பார்கள்...
ஆனால் ஓர் இளையருக்குப் பசியால் வந்த வினை, அவரை ஒரு மணி நேரம் சிறைவைத்தது.
மென்செஸ்ட்டரின் (Manchester) டீன்ஸ்கேட் (Deansgate) பகுதியில் கடந்த ஜனவரி 18 அன்று அந்த சுவாரசியமான சம்பவம் நடந்தது.
ஆடவர் ஒருவர் தனக்குப் பிடித்தமான 'கபாப்' (Kebab) உணவை ஆர்டர் செய்யத் திட்டமிட்டார்.
அருகே இருந்த தொலைபேசிக் கூடத்துக்குள் (Phone Box) நுழைந்து ஆர்டர் செய்ய முடிவெடுத்தார்.
உள்ளே சென்ற பிறகுதான் தெரிந்தது அங்கு தொலைபேசியே இல்லை என்று...
அங்கிருந்து வெளியே வர முயன்ற அந்த நபருக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
கனமான கதவு தானாகவே மூடிக்கொண்டது.
அந்தக் கதவைத் திறக்கப் பிரத்தியேகச் சாவி (BT Engineers key) தேவை என்பதால் எவ்வளவு முயன்றும் வெளியே வர முடியவில்லை.
சுமார் ஒரு மணி நேரமாக உள்ளே சிக்கித்தவித்த அந்த நபர் கூடத்தின் கீழ்ப்பகுதியில் இருந்த ஒரு கண்ணாடியை அகற்றினார்.
அந்தச் சிறிய ஓட்டை வழியாகத் தலையை நுழைத்து வெளியே வர முயன்ற காட்சிகள் காணொளியாகப் பகிரப்பட்டன.
இறுதியில் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
நவீனக் கருவிகளைக் கொண்டு கதவு திறக்கப்பட்டது.
ஒரு வழியாக வெளியே வந்த அந்த இளையர், வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே தன்னை மீட்ட அதிகாரிகளுக்குக் கைகுலுக்கி நன்றி தெரிவித்தார்.

ஆதாரம் : Others