Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஓடி ஓடி பாம்பு உருவத்தை உருவாக்கிய ஆடவர்

வாசிப்புநேரம் -
ஓடி ஓடி பாம்பு உருவத்தை உருவாக்கிய ஆடவர்

(படம்: Facebook/Cheng Hock Toh)

சீனப் புத்தாண்டு நெருங்குகிறது...சீனப் பஞ்சாங்கத்தின்படி இவ்வாண்டு பாம்பு ஆண்டாக அனுசரிக்கப்படுகிறது.

ஒருவர் ஒடியே கொண்டாட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

செங் ஹொக் டோ என்பவர் தாம் ஓடும் பாதையை வைத்து பாம்பு உருவத்தை உருவாக்கியுள்ளார்.

வரைபடத்தில் அந்த உருவத்தைக் காணமுடிகிறது.

அவர் Strava Art எனும் Facebook பக்கத்தில் பதிவேற்றம் செய்த படம் 57,000 விருப்பக்குறிகளைப் பெற்றது.

வரைபடத்தில் பாம்பின் வால் பகுதி தெம்பனீஸ் அவென்யூ 10இல் உள்ளது.

தலைப்பகுதி தெம்பனீஸ் ஈஸ்ட் வட்டாரத்தில் உள்ளது.

இரண்டு இடங்களுக்கு இடையே பாம்பின் உடல் வளைந்து வளைந்து செல்கிறது.

வரைபடத்தில் பாம்புக்குக் கண்கள் இருப்பதைப் போலவும் அது நாக்கை நீட்டுவதைப் போலவும் தெரிகிறது.

அவ்வாறு தத்ரூபமாக வரைந்த செங்கிடம் பலர் கேள்வி எழுப்பினர்.

'எப்படி வளைந்து வளைந்து ஓடமுடியும்? ஒழுங்கான பாதைகளில் ஓடியதைப் போல் தெரியவில்லையே!' என்று அவர்கள் கருத்துரைத்தனர்.

செங் கழக புளோக்குகளின் வெற்றுத்தளங்களைக் கடந்து ஓடியிருக்கலாம் என்று சிலர் ஊகித்தனர்.

அவர்கள் அவரின் முயற்சியைப் பாராட்டினர்.

பாம்பு உருவத்தை உருவாக்கக் கிட்டத்தட்ட 21 கிலோமீட்டர் ஓடியதாக செங் சொன்னார்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்