Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பிள்ளைகள் உருவாக்கிய வேடிக்கையான ஓவியங்களை Photoshop மூலம் மாற்றியமைத்த ஆடவர்!

வாசிப்புநேரம் -

பிரிட்டனைச் சேர்ந்த டாம் கர்ட்டிஸ் (Tom Curtis) உலகெங்கும் உள்ள பிள்ளைகள் உருவாக்கிய ஓவியங்களை Photoshop என்னும் மென்பொருளைப் பயன்படுத்தி மாற்றியமைத்துள்ளார். 

அந்த ஓவியங்களை ‘Things I Have Drawn’ என்னும் அவரது Instagram பக்கத்தில் பகிர்ந்துவருவதாக Hindustan Times நாளேடு கூறியது. 

அதில் பிள்ளைகளின் வேடிக்கையான ஓவியங்களைக் கண்டு ரசிக்கலாம். 

உதாரணத்திற்கு நீள்சதுர உடலைக் கொண்ட பூனையையோ ஆக நீளமான அலகு கொண்ட பறவையையோ காணலாம். 

அவரது பதிவுகள் ஆயிரக்கணக்கில் விருப்பக்குறிகளைப் பெற்றுள்ளன. 

இணையவாசிகள் அவர்களது கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர். 

அவற்றுள் சில: 

"இந்த ஓவியங்கள் பார்க்க மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன! எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்க இயலவில்லை!"

"இவற்றைக் காணும்போது வருணிக்க முடியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது" 

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்