சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த மாம்பழங்கள் உதவுமா?
Unsplash/Desirae Hayes-Vitor
This audio is generated by an AI tool.
இந்தியாவில் மாம்பழத்தின் மீது மக்களுக்குத் தனி மோகம்.
குறிப்பாக, கோடைக்காலத்தில் மக்கள் மாம்பழங்களை விரும்பிச் சாப்பிடுகின்றனர்.
ஆனால் நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் மாம்பழங்களைச் சாப்பிட முடியுமா?
பொதுவாக நீரிழிவு நோய் கொண்டவர்கள் மாம்பழங்களைச் சாப்பிடலாம். ஆனால் அதிகமாக உண்டால் ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவு கூடும். அளவாகச் சாப்பிட்டால் பிரச்சினை இருக்காது என்று BBCயிடம் பேசிய மருத்துவர் ஒருவர் கூறினார்.
BBC அது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் மாம்பழத்தையொட்டி இரண்டு ஆய்வுகள் நடக்கின்றன.
மாவுச்சத்து உணவுகளுக்குப் பதிலாக மாம்பழங்களை அளவாக உண்டால் இரண்டாம் வகை நீரிழிவு நோய் (type 2 diabetes)கொண்டிருப்பவர்களின் ரத்தத்திலிருக்கும் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று இரு ஆய்வுகளும் கூறுகின்றன.
இந்தியாவில் 77 மில்லியன் பேருக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் இருக்கிறது. மேலும் 25 மில்லியனுக்கு மேலானோர் நீரிழிவு வரக்கூடிய அபாயத்தில் இருக்கின்றனர்.
மாம்பழங்கள் எவ்வாறு உதவும்?
உணவு உண்ணும்போது மாம்பழத் துண்டையும் சேர்த்து உண்டால் ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவு திடீரென்று உயராது என்கிறது ஆய்வு.
ரொட்டி போன்ற மாவுச்சத்து உணவுகளை ஒப்பிட்டு பார்க்கையில் மாம்பழம் ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவைச் சிறியளவிலேயே ஏற்றும்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மாம்பழத்தைச் சாப்பிடும்போது சர்க்கரை அளவின் ஏற்றத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
ஆனால் எதுவும் அளவாக இருக்கவேண்டும் என்பதை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுச் சொல்கின்றனர்.