சந்தையில் மருத்துவ சிகிச்சை...
Facebook/marketdoctorsng
This audio is generated by an AI tool.
சந்தையில் மருத்துவ சிகிச்சை...
நைஜீரியாவின் ஆகப் பெரிய லேகோஸ் (Lagos) நகர மருத்துவர் ஒருவர் அதனை வழங்குகிறார்.
நைஜீரியாவில் ஏராளமானோர் ஆரம்பகட்ட சுகாதாரச் சேவையின்றி அல்லாடுகின்றனர்.
ஆரோக்கியத்தை விட வேலைக்கு முன்னுரிமையளிக்கும் வர்த்தகர்களுக்கு மருத்துவ சிகிச்சை;
அவர்கள் வேலை செய்யும் சந்தைகளிலேயே அது சாத்தியமாகிறது.
நைஜீரியாவின் பரபரப்பான சந்தைகளில் சுறுசுறுப்பாய் வேலை செய்வோர் பெரும்பாலும் உடல் நலனில் அக்கறை காட்டுவதில்லை.
அவர்களிடையே பிரபலமாகிவிட்டார் டாக்டர் யெடுண்டே அயோ-ஓயலோவோ (Yetunde Ayo-Oyalowo).
பின்தங்கிய நிலையில் உள்ளோருக்கும் சுகாதாரச் சேவை எளிதில் கிடைக்க வேண்டிய அவசியத்தை டாக்டர் அயோ-ஓயலோவோ புரிந்துவைத்துள்ளார்.
மருத்துவமனைகளையே பார்க்காத மக்களுக்கு மலிவுக் கட்டணத்தில் நேரடியாகச் சுகாதார சேவை வழங்குகிறார்.
டாக்டர் அயோ-ஓயலோவோவின் முயற்சிகள் மூலம் இதுவரை 400,000க்கும் அதிகமான நோயாளிகள் பலனடைந்துள்ளனர்.