Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

தொடர்புத் திறன் குறைபாடு இருந்தால் என்ன? முழுநேரச் சிகையலங்காரத் தொழில் செய்யும் இளையர்

வாசிப்புநேரம் -
தொடர்புத் திறன் குறைபாடு அதாவது autism ஒரு தடையல்ல என்பதைப் பலர் நிரூபித்துவருகின்றனர்.

அந்த வரிசையில் இணைகிறார் மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த அய்மான் நுர்ஹக்கிம் ஜெஃப்ரி (Aiman Nurhakim Jeffry).

அய்மானுக்கு வயது 25.

6 வயதாக இருந்தபோது அவருக்குத் தொடர்புத் திறன் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அவரின் தந்தை FMT செய்தியிடம் சொன்னார்.

ஆனால் அது சிகையலங்காரத் தொழிலைக் கற்றுக்கொள்ள அய்மானுக்குத் தடையாக இல்லை.

முடிதிருத்தும் வேலையைக் கற்றுக்கொள்வதற்காக மட்டும் அல்ல அய்மானின் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் சமூகத்தில் மற்றவர்களுடன் சகஜமாகப் பழகுவதை ஊக்குவிக்கவும் அவரின் அப்பா அய்மானைப் பயிற்சிக்கு அனுப்பினார்.

அந்த முயற்சி வீண்போகவில்லை.

இப்போது அய்மான் சிகையலங்காரத் தொழிலில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.

மகனுக்காகச் சொந்த முடிதிருத்தும் கடையை வைத்துக்கொடுக்கும் திட்டம் இருப்பதாகவும் அய்மானின் தந்தை சொன்னார்.

வரும் ஏப்ரலில் தொடர்புத் திறன் குறைபாடு விழிப்புணர்வு மாதம் அனுசரிக்கப்படவுள்ளது. இந்நிலையில் அய்மானின் இந்த வளர்ச்சி மற்றப் பிள்ளைகளுக்கு ஊக்கமாக அமையும் என்று தந்தை நம்புகிறார்.
ஆதாரம் : Others/Free Malaysia Today

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்