கிரீன்லந்தில் சுனாமி...பூமி 9 நாள் குலுங்கியது
கிரீன்லந்தில் ஏற்பட்ட சுனாமி பூமி முழுதும் 9 நாள்கள் வரை அதிர்வுகளை ஏற்படுத்தியதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பூமியில் உணரப்பட்ட அதிர்வுகள் எங்கிருந்து வந்தன என்பது மர்மமாகவே இருந்தது.
Science சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள் விடை அளித்துள்ளன.
15 நாடுகளைச் சேர்ந்த 68 ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
பனிப்பாறை ஒன்று அனைத்துக்கும் காரணம் என அவர்கள் அறிந்தனர்.
மலை அடிவாரத்திலிருந்த அந்தப் பனிப்பாறை நெடுங்காலமாக உருகிக்கொண்டிருந்தது.
பனிப்பாறை கடந்த ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி உடைந்து அதன் துண்டுகள் அனைத்தும் தண்ணீருக்குள் விழுந்தன.
விழுந்த துண்டுகள் மொத்தம் 10,000 ஒலிம்பிக் நீச்சல் குளங்களை நிரப்பக்கூடிய அளவில் இருந்தன.
அதன் தாக்கத்தால் சுனாமியே ஏற்பட்டது.
650 அடி உயரம் கொண்ட அலை உருவானது.
நீர்ப்படலத்தைச் சுற்றி மலைகள் இருந்ததால் அலையால் வெகுதூரம் செல்லமுடியவில்லை.
அலை முன்னும் பின்னுமாகச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.
seiche என்று அழைக்கப்படும் அந்த நிகழ்வு பூமி முழுதும் அதிர்வை ஏற்படுத்தியது.
அதிர்வுகள் அவ்வாறு 9 நாள்கள் வரை நீடித்தது வரலாற்றில் நடந்ததில்லை என்று ஆய்வாளர்கள் கூறினர்.
பருவநிலை மாற்றத்தால் உலகம் எதிர்பாராத வழிகளில் செயல்படுகிறது என்பதை அது எடுத்துக்காட்டுவதாக அவர்கள் CNN செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.