Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உலகம் மெதுவாய்ச் சுற்றுகிறது. ஏன்?

வாசிப்புநேரம் -
உலகம் மெதுவாய்ச் சுற்றுகிறது. ஏன்?

(படம்: Unsplash)

உலகம் முன்பை விட இப்போது சற்று மெதுவாய்ச் சுற்றுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

துருவங்களில் உறைந்துள்ள பனிக்கட்டிகள் உருகுவதால் உலகின் சுழற்சி மெதுவடைந்துள்ளதாகத் தெரியவந்திருக்கிறது.

அமெரிக்காவின் தேசிய அறிவியல் கல்விக்கழக ஆய்வொன்றில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

ஒரு நாளின் சராசரி நேரம் 86,400 விநாடிகள்.

உலகம் சுழல்வது மெதுவானால் ஒரு நாளின் நேரம் ஒருசில வினாடிகள் அதிகரிக்கும்.

பகல் பொழுது நீளமாகும்.

உலகின் வெப்பநிலையை அது இன்னும் அதிகரிக்கச் செய்யல்லாம்.

மனிதர்கள் தொடர்ந்து அதிக அளவில் வெப்ப வாயுக்களை வெளியேற்றினால் உலகம் வெப்பமடையும்.

அதன் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று ஆய்வு காட்டுகிறது.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்