கிறிஸ்துமஸ் பரிசில் தெரியவந்த அதிர்ச்சியான பிறப்பு ரகசியம்
வாசிப்புநேரம் -
படம்: AP Photo/Thomas Peipert
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
கிறிஸ்துமஸுக்காகக் கிடைத்த பரிசு இரண்டு குடும்பங்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது.
38 வயது கைல் பைலினிற்கு (Kyle Bylin) கிடைத்த பரிசு... வீட்டிலேயே செய்துபார்க்கும் மரபணுச் சோதனைத் தொகுப்பு.
தமது முன்னோர் பற்றித் தெரிந்துகொள்ள மிகுந்த ஆர்வத்தோடு அவர் அதைச் செய்துபார்த்திருக்கிறார்.
கிடைத்ததோ பேரதிர்ச்சி.
38 ஆண்டுக்குமுன் அவர் பிறந்த மருத்துவமனையில் நடந்த மிகப்பெரிய தவறு வெளிச்சத்துக்கு வந்தது.
ஜெரிமி மோரிசன் (Jeremy Morrison) என்பவரும் கைலும் இடம் மாறியிருக்கின்றனர்.
நார்த் டக்கோட்டாவில் 1988ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரே நாளில் பிறந்த இரண்டு குழந்தைகள் தவறான பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.
சொந்தக் குழந்தையின் முதல் வார்த்தை, முதல் நடை, முதல் பள்ளிக்கூட நாள், பிள்ளையின் திருமணம் எனப் பல சிறப்பான தருணங்களைத் தவறவிட்டதை எண்ணி குடும்பங்கள் சோகத்துக்குள்ளாகின.
அவர்கள் மருத்துவமனைமீது வழக்குத் தொடுத்துள்ளனர்.
அந்தக் காலத்தின் மருத்துவ, ஊழியர் பதிவேடுகள் இப்போது இல்லை என்று மருத்துவமனை கூறுகிறது.
தங்கள் ஊழியர்கள் அந்தத் தவற்றுக்குக் காரணமென்பதை உறுதிப்படுத்துவதற்கு ஆதாரமில்லை என்றும் அது திட்டவட்டமாகக் கூறுகிறது.
உண்மை இப்போது தெரிந்தபோதும் தங்களை வளர்த்த பெற்றோரே என்றும் முக்கியம் என்று இருவரும் கூறியிருக்கின்றனர்.
முன்பின் தெரியாத சொந்தக் குடும்பங்களுடனும் உறவை மலரச் செய்யும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆதாரம் : AP