வாழ்வியல் exclusive
"உடல் சொல்வதைக் கேளுங்கள்"
வாசிப்புநேரம் -
(படம்: Envato Elements)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அடிக்கடி தலைவலி...
காலையில் எழுந்ததும் களைப்பு...
முன்புபோல் வேலைகளைச் செய்ய முடியவில்லை..
இதற்கெல்லாம் காரணம் "வயசாகுது.... அதான்!"
என்று சொல்லிவிட்டுக் கடந்துசெல்பவர்கள் பலர்.
குறிப்பாக 40 வயதைக் கடந்த பெண்கள் சோர்வு, உடல்வலி, தூக்கமின்மை, எரிச்சல் போன்ற மாற்றங்களை வாழ்க்கையின் இயல்பான பகுதியாக ஏற்றுக்கொள்கிறார்கள்.
ஆனால் இவை வயதின் அறிகுறிகள் மட்டுமல்ல.
மாதவிடாய் நிற்கும் காலத்தை நோக்கி உடல் நகர்வதற்கான அமைதியான எச்சரிக்கைகளாக இருக்கலாம் என்று கூறுகிறார் டாக்டர் H ஷகிலா பானு.
உடலுக்குள் என்ன நடக்கிறது?
மாதவிடாய் நிற்கும் காலம் என்பது ஒருநாள் திடீரென நிகழும் மாற்றமல்ல.
மாற்றங்கள் முன்கூட்டியே தொடங்கிவிடும்.
ஹார்மோன்களின் அளவு படிப்படியாகக் குறையும்.
குறிப்பாக ஈஸ்ட்ரஜன் (Estrogen) தொடர்பான மாற்றங்கள் உடல் நடவடிக்கைகளை மாற்றிவிடும்.
இதனால் உடல் அழற்சி அதிகரிக்கலாம் என்கிறார் டாக்டர் ஷகிலா.
அழற்சி என்றால்?
கையில் அடிபட்டால் வலி ஏற்படும்.
காயம் ஏற்பட்ட இடம் சிவக்கும்.
சில நேரங்களில் வீக்கம் ஏற்படும்.
இது உடலைப் பாதுகாக்க இயல்பாக ஏற்படும் ஒன்று.
இந்த அழற்சி சில நாள்களில் குறைந்துவிடும்.
ஆனால் உடலுக்குள் நீண்டகாலமாகச் சிறிய அளவில் அழற்சி நீடித்தால் அது சோர்வு முதல் பல்வேறு உடல்நலக் கோளாறுகளைக் கொண்டுவரும்.
இதனைக் கையாள 3 வழிகள் உண்டு என்கிறார் டாக்டர் ஷகிலா.
1. உணவு
பழங்கள், நார்ச்சத்து நிறைந்த உணவு வகைகள், கேழ்வரகு போன்ற முழு தானியங்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.
இவை உடலுக்குத் தேவையான சத்துகளைத் தருகின்றன.
எலும்பின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றன.
அதிகச் சர்க்கரை கொண்ட உணவுகளைத் தவிர்ப்பதும் அவசியம்.
2. உறக்கம்
தூக்கம் என்பது உடலுக்குக் கிடைக்கும் இலவச சிகிச்சை.
நல்ல உறக்கமும் ஓய்வும் உடல் அணுக்களைப் புதுப்பிக்க உதவும்.
3. உடற்பயிற்சி
எலும்புகளை வலுப்படுத்த, மனஅழுத்தத்தைக் குறைக்க உடற்பயிற்சி உதவுகிறது.
பெண்கள் எடை தூக்கலாம்.
நடைப்பயிற்சி செய்யலாம்.
இயற்கைச் சூழலில் நடக்கலாம்.
உடல் சொல்வதைக் கேளுங்கள்
மாதவிடாய் நிற்கும் காலம் என்பது பெண்களின் வாழ்க்கையில் இயல்பாக நிகழும் ஒரு மாற்றம்.
ஆனால் அந்த மாற்றத்தை உடல் பல வழிகளில் நமக்குத் தெரிவிக்கும்.
அடிக்கடி வரும் சோர்வு, தலைவலி அல்லது தூக்கமின்மையை "வயசாகுது அதான்" என்று சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் உடல் அனுப்பும் அறிகுறியாக எடுத்துக்கொண்டால் பல பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கையாள முடியும்.

ஆதாரம் : Mediacorp Seithi