Skip to main content
மனச்சோர்வு அபாயம் பெண்களுக்கு அதிகம்...அதற்குக் காரணம்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

மனச்சோர்வு அபாயம் பெண்களுக்கு அதிகம்...அதற்குக் காரணம்?

வாசிப்புநேரம் -
மனச்சோர்வு அபாயம் பெண்களுக்கு அதிகம்...அதற்குக் காரணம்?

(படம்:unsplash)

ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் மனச்சோர்வு (Depression) ஏற்படும் அபாயம் ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாக இருப்பது தெரியவந்திருக்கிறது.

சுமார் 200,000 பேரின் மரபணு ஆராயப்பட்டது.

மனச்சோர்வை உண்டாக்கும் மரபணுக் குறியீடுகள் (Genetic Markers) ஆண்களைவிட பெண்களிடம் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுவரை ஆண்களைவிட பெண்களுக்கு அதிக அளவில் மனச்சோர்வு ஏற்படுகிறது என்பதை அறிந்திருந்தாலும் அதற்கான காரணம் தெரியாமல் இருந்தது.

ஆய்வின் முடிவுகள் மூலம் பெண்களுக்குத் தனிப்பட்ட சிகிச்சையை உருவாக்கமுடியும் என்று ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர்.

ஆக அதிக அளவில் ஏற்படும் மனநலப் பிரச்சினைகளில் மனச்சோர்வும் ஒன்று. உலகில் 300 மில்லியனுக்கும் மேலானோர் மனச்சோர்வால் அவதியுறுகின்றனர்.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்