Skip to main content
அதிபர் டிரம்ப்பைச் சந்தித்த மெஸ்ஸி!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

அதிபர் டிரம்ப்பைச் சந்தித்த மெஸ்ஸி!

வாசிப்புநேரம் -
காற்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி (Lionel Messi) அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பைச் சந்தித்துள்ளார்.

திரு மெஸ்ஸியும் அவரது இண்டர் மயாமி (Inter Miami) காற்பந்து குழுவினரும் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டனர்.

கடந்த டிசம்பரில் இண்டர் மயாமி அமெரிக்காவின் Major League Soccer காற்பந்து போட்டியில் வெற்றிப்பெற்றதைத் தொடர்ந்து அதிபர் டிரம்ப் அணிக்கு அழைப்பு விடுத்தார்.

செய்தியாளர்கள் முன்னிலையில் அவர் அணிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தமது மகன் திரு மெஸ்ஸியைச் சந்திக்க மிகவும் ஆவலாக இருந்ததாக அவர் கூறினார்.

"லியோ அவரது 47ஆவது கோப்பையை வென்றிருக்கிறார்!" என்பதை அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.

திரு மெஸ்ஸி ஈராண்டுகளில் இரு முறை மிக முக்கியமான விளையாட்டாளர் விருதை வென்றிருக்கிறார். அமெரிக்கக் காற்பந்து வரலாற்றில் அந்தச் சாதனையைப் படைத்த முதல் வீரர் அவர்.

மெஸ்ஸி பிரபல முன்னாள் பிரேசிலிய காற்பந்து வீரர் பெலெவுடன் (Pele) திறமைவாய்ந்தவர் என்றும் திரு டிரம்ப் குறிப்பிட்டார்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்