இனி ஹோட்டல்களுக்கும் Michelin அங்கீகாரம்

(படம்: JOEL SAGET / AFP)
உணவகங்கள் போன்று இனி ஹோட்டல்களுக்கும் மிஷெலின் (Michelin) அங்கீகாரம் வழங்கப்படவுள்ளது.
இணையத்தில் பலதரப்பட்ட ஹோட்டல் பரிந்துரைகள் உள்ளன.
அவற்றிலிருந்து பயணிகளுக்கு நம்பகமான குறிப்பு ஒன்றை உருவாக்கவுள்ளதாக மிஷெலின் தொகுப்பாசிரியர்கள் கூறினர்.
அதிகமான தகவல்கள் இல்லாத காலக்கட்டத்தில் பயணிகளுக்கு உதவுவதற்காக மிஷெலின் அங்கீகாரம் 1900ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இன்றோ எக்கச்சக்கமான தகவல்கள்...
ஒரு பயணத்திற்குத் திட்டமிட சராசரி 10 மணி நேரம் செலவிட வேண்டியிருப்பதாகவும் 10க்கும் அதிகமான தளங்களைப் பயன்படுத்த வேண்டியிருப்பதாகவும் மிஷெலின் இயக்குநர் கூறினார்.
120 நாடுகளில் உள்ள 5,300 ஹோட்டல்கள் முதலில் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
அடுத்த ஆண்டு விருதுகள் வழங்கப்படும்.
சிறந்த ஹோட்டல்களுக்குச் சாவிகள் அளிக்கப்படும்.
கட்டடக்கலை, தனித்துவம், சேவை, வசதி, கட்டணம் முதலியவற்றின் அடிப்படையில் ஹோட்டல்கள் மதிப்பிடப்படும்.
-AFP