Skip to main content
பால் குடித்தால் எலும்பு வலுப்படுமா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

பால் குடித்தால் எலும்பு வலுப்படுமா?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பால் குடித்தால் எலும்பு வலுப்படும் என்று பலரும் சொல்லிக் கேட்டிருப்போம்.

அது உண்மையா?

அந்தக் கூற்றுக் குறுகியகால ஆய்வுகளைச் சார்ந்தது என்றும் பால் பொருள்களை விற்பவர்கள் அதை முன்னிலைப்படுத்தினர் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

நமது எலும்புகள் கால்சியத்தால் ஆனவை. பாலிலும் அந்த ஊட்டச்சத்து உள்ளது.

நரம்பு, இருதயச் செயல்பாடு ஆகியவற்றுக்குக்
கால்சியம் இன்றியமையாத ஊட்டச்சத்தாக அமைகிறது.

மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் 9 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட பிள்ளைகளுக்கு அதிக கால்சியம் தேவைப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

பால் சார்ந்த பொருள்களைச் சாப்பிடுவதால் எலும்பின் திண்மம் சற்று அதிகரித்தாலும் அதனால் எலும்பு முறிவைத் தடுக்க முடியாது என்கிறார்கள் நிபுணர்கள்.

பால் அருந்துவதைத் தவிர உடற்பயிற்சி, உணவு முறை ஆகியவற்றால் எலும்பு வலுப்பெற அதிக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் சொல்கின்றனர்.

காய்கறிகள், பழங்கள், ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, நல்ல தூக்கம் ஆகியவை முக்கியம். 

ஆதாரம் : New York Times

மேலும் செய்திகள் கட்டுரைகள்