Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

90ஆவது பிறந்தநாள் பரிசு..வானிலிருந்து குதிப்பது

வாசிப்புநேரம் -
அமெரிக்காவைச் சேர்ந்த 90 வயதுப் பெண் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு வானிலிருந்து குதித்தார்.

மிஸோரி (Missouri) மாநிலத்தில் அவர் 3,048 மீட்டர் உயரத்தில் பறந்த விமானத்திலிருந்து குதித்ததாக New York Post செய்தி நிறுவனம் சொன்னது.

எலனர் மன் (Eleanor Mann) ஏற்கெனவே 70 வயதாக இருக்கும்போது வான் சாகசத்தில் ஈடுபட்டார்.

அப்படி 90 வயது வரை வாழ்ந்தால் மீண்டும் வான் சாகசம் செய்ய அவர் எண்ணினார்.

மன் அப்படியே செய்தார்.

பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கொள்ளுப் பேரப்பிள்ளைகள் என அனைவரும் அவர் தரையிறங்குவதைப் பார்வையிட்டனர்.

"காற்றில் மிதக்கும் உணர்வு அற்புதமாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என் குடும்பத்துக்கு நன்றி," என்று மன் சொன்னார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டெக்சஸ் மாநிலத்தைச் சேர்ந்த 106 வயது ஆடவரும் வான் சாகசம் செய்தார்.

அவர் வான் சாகசத்தில் ஈடுபட்ட ஆக வயதானவர் என்ற சாதனையைப் படைத்தார்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்