Skip to main content
கைத்தொலைபேசியைப் பறித்துச்சென்ற குரங்கின் சேட்டை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கைத்தொலைபேசியைப் பறித்துச்சென்ற குரங்கின் சேட்டை

வாசிப்புநேரம் -

இந்தியாவில் 'பேரம் பேசிய' ஒரு குரங்கு இணையத்தளத்தில் அதிகம் பேசப்படுகிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிருந்தாவனம் நகரில் குரங்கு ஓர் ஆடவரின் கைத்தொலைபேசியைப் பறித்தது.

அது கைத்தொலைபேசியைப் பிடித்தவாறு அருகே உள்ள கட்டடத்தின் மாடத்தில் உட்கார்ந்தது.

கைத்தொலைபேசியைத் திரும்பக் கொடுக்கும்படி ஆடவரும் மேலும் இருவரும் குரங்கிடம் மன்றாடினர்.

அதைக் காட்டும் காணொளி Instagramஇன் kartik_rathoud_134 பக்கத்தில் பகிரப்பட்டது.

'சாப்பிடுவதற்கு ஏதாவது கொடுத்தால் அது சாதனத்தைக் கொடுத்துவிடலாம்' என்ற நம்பிக்கையில் ஆடவர்கள் குரங்கிற்குச் சில பானங்களைத் தயார்செய்கின்றனர்.

அவர்கள் குரங்கை நோக்கி ஒரு பொட்டலத்தை வீசுகின்றனர்... குரங்கு அதைப் பிடிக்கவில்லை.

ஆடவர்கள் இன்னொரு பொட்டலத்தை வீசுகின்றனர்...குரங்கு அதைப் பிடித்தது...

அது உடனடியாகக் கையில் இருந்த கைத்தொலைபேசியை ஆடவர்களை நோக்கி வீசியது.

கைத்தொலைபேசி மீண்டும் கிடைத்தது.

காணொளியைக் கண்டவர்கள் பலர் குரங்கின் புத்திசாலித்தனத்தை மெச்சினர்.

'கைத்தொலைபேசிக்குப் பதில் சாப்பாடு... குரங்கிற்குப் பேரம் பேசத் தெரிந்திருக்கிறது!'

'குரங்குகள் உண்மையில் விலங்குகளைப் போல் நடிக்கின்றன!'

என்று சிலர் கூறினர்.

ஆதாரம் : Others/Social media

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்