குரங்கு கையில் நாய்க்குட்டி!
வாசிப்புநேரம் -

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்
வியட்நாமில் குரங்கு கையில் நாய்க்குட்டி மாட்டியது.
அந்தக் காணொளி TikTok தளத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
தன்னைக் கட்டிப்போட்டிருந்த சங்கிலியை உடைத்து நாய்க்குட்டியைக் குரங்கு மரத்தின்மேல் கொண்டுசென்றது காணொளியில் தெரிகிறது.
கொண்டுசென்றது மட்டுமல்லாமல் கிளைக்குக் கிளை அது தாவுகிறது.
அந்த வெள்ளை நாய்க்குட்டியைக் குரங்கிற்குப் பிடிக்கும் என்று காணொளியைப் பதிவுசெய்தவர் குறிப்பிட்டார்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் குரங்கு நாய்க்குட்டியைத் தூக்கிக்கொண்டு ஓடிவிடுமாம்.
குரங்கைப் பிடிப்பது சிரமம்.
அதனால் அதை அது போக்கில் விட்டுவிட எண்ணுவதாக அவர் சொன்னார்.
குரங்கு இதுவரை நாய்க்குட்டிக்குக் காயம் விளைவிக்கவில்லை.
ஆனால் நாயை மரத்துக்குமேல் கொண்டு செல்வதைப் பார்த்து இணையவாசிகள் கவலை தெரிவித்தனர்.
அதே நேரத்தில் வீட்டில் குரங்கை வைத்திருப்பவர்கள் அதை முறையாகத் தடுத்து வைக்கவேண்டுமென சிலர் கூறினர்.
வீட்டில் உள்ள மற்ற பிராணிகளையும் பிள்ளைகளையும் பாதுகாக்க அவ்வாறு செய்வது முக்கியம் என்று அவர்கள் கூறினர்.

ஆதாரம் : Others