Monopoly விளையாட்டு... தொடங்கி 90 ஆண்டு நிறைவு
royalmint.com
This audio is generated by an AI tool.
Monopoly விளையாட்டு... நம்மில் பலர் விளையாடியிருப்போம்.
இடங்களை வாங்குவது, வாடகை செலுத்துவது, நொடித்துப்போவது, சிறைக்குச் செல்வது...
சிலரின் நட்பு முறிந்துபோகவும் காரணமாக இருந்திருக்கிறது!
இதெல்லாம் Monopoly விளையாட்டின் அம்சங்கள்.
அது அறிமுகம் செய்யப்பட்டு 90 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
அதை அங்கீகரிக்கும் வகையில் சிறப்பு 50 பென்ஸ் காசு வெளியிடப்படுகிறது.
அதன் தங்க ரகத்தின் விலை சுமார் 3,000 வெள்ளி.
ஏறத்தாழ 26 வெள்ளி முதல் 44 வெள்ளி வரையிலான விலை குறைவான ரகங்களும் விற்கப்படுகின்றன.
Monopoly விளையாட்டு உலகமெங்கும் 275 மில்லியனுக்கும் அதிகமான முறை விற்கப்பட்டுள்ளது.
அது 47 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.