Skip to main content
மழைக்காலத்தில் மலை ஏறுபவரா? இது உங்களுக்கு!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

மழைக்காலத்தில் மலை ஏறுபவரா? இது உங்களுக்கு!

வாசிப்புநேரம் -
மழைக்காலத்தில் மலை ஏறுபவரா? இது உங்களுக்கு!

Mediacorp

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் இம்மாதம் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், அண்டை நாடு மலேசியாவின் சபா மாநிலத்தில் கனத்த மழையால் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளன.

இருப்பினும், இத்தகைய வானிலையைப் பொருட்படுத்தாமல் பலர் மலையேறுகின்றனர்.

மலையேற்ற ஆர்வலர்கள் எந்தச் சூழ்நிலையிலும் அதில் ஈடுபட முற்படுவார்கள். அதனால் சில முக்கியப் பாதுகாப்பு உத்திகளைத் தெரிந்துகொள்வது அவசியம்.

1) மழைக்கு ஏற்ற காலணிகளை அணிந்துகொள்ளவேண்டும்.

கணுக்கால்களையும் பாதங்களையும் பாதுகாக்கும் காலணிகளை அணிந்தால் காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

2) ஈரமான நடைபாதையில் வழுக்காமல் இருக்க....

குறுகிய படிகளை எடுத்துவைத்து நடந்துசென்றால் வழுக்கி விழும் அபாயத்தைக் குறைக்கமுடியும். மேலும், கற்கள், வேர்கள் ஆகிய நிலையான மேற்பரப்புகளில் நடந்துசென்றால் வழுக்கி விழுவதைத் தவிர்க்கமுடியும். நிதானமாக நடக்கவேண்டும். மலையேறக் கம்புகளைப் பயன்படுத்தினால் மேடு பள்ளமாக இருக்கும் இடங்களில் நிலையாக இருக்கமுடியும்.

3) நிலச்சரிவின் அறிகுறிகளைக் கவனிக்கவேண்டும்

மழைக்காலத்தில் மலையேறும்போது நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

தரையில் புதிய வெடிப்புகள், சாய்ந்திருக்கும் மரங்கள், அதிரும் சத்தங்கள் அல்லது பாறைகள் விழுந்தோடும் சத்தங்கள் ஆகியவற்றை அறிந்தால் உடனே அங்கிருந்து புறப்படவேண்டும். இதன்மூலம் நிலச்சரிவில் சிக்குவதைத் தவிர்க்கமுடியும்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்