Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நீரிழிவு நோய், உடல் பருமன்... சிங்கப்பூர் இந்தியர்களிடையே சராசரியைவிட அதிகமாக உள்ளதா?

Diabetes என்றழைக்கப்படும் நீரிழிவு நோய், உலகில் 400 மில்லியனுக்கும் அதிகமானோரைப் பாதித்துள்ளது. 

வாசிப்புநேரம் -

Diabetes என்றழைக்கப்படும் நீரிழிவு நோய், உலகில் 400 மில்லியனுக்கும் அதிகமானோரைப் பாதித்துள்ளது.

  • அந்த எண்ணிக்கை 2040ஆம் ஆண்டுக்குள் 640 மில்லியனை எட்டலாம் 
  • சிங்கப்பூரில் மட்டும் 400,000க்கும் அதிகமானோருக்கு நீரிழிவு நோய் உள்ளது. 2050ஆம் ஆண்டுக்குள், அந்த எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டலாம் 
  • நீரிழிவு நோய் மற்ற இனத்தவர்களுடன் ஒப்பிடுகையில், சிங்கப்பூரிலுள்ள இந்தியர்களை அதிகம் பாதிக்கின்றது எனத் தரவுகள் காட்டுகின்றன.

நீரிழிவு நோயைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, சிங்கப்பூர் நீரிழிவு நோய் அமைப்பின் தலைவர்  (President, Diabetes Singapore; Head, Glycemic Index Research Unit, Temasek Polytechnic) டாக்டர் கல்பனா பாஸ்கரனிடம் 'செய்தி' பேசியது. அவர் சொல்வது...

அத்தகைய அளவிலான சர்க்கரை, அளவுக்கு அதிகமானது. நாளுக்கு ஒருவர் உட்கொள்ளும் உணவில் 10 விழுக்காட்டுக்கும் அதிகமாகச் சர்க்கரை இருப்பது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்.

ஒருவர் அதிகபட்சமாக 5இலிருந்து 10 தேக்கரண்டி அளவு சர்க்கரை உட்கொள்ள முயலவேண்டும் என உலகச் சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.

ஒருவர் உண்ணும் உணவுக்கும் அவர் பயன்படுத்தும் சக்திக்கும் இடையே ஓரளவு சமநிலை இருக்கவேண்டும்

ஒருவர் பயன்படுத்தும் சக்தியைவிட, அதிகமாக உண்டால் உடல் எடை கூடும் - உடல் பருமனை எதிர்நோக்கலாம்.

சிங்கப்பூரில் உள்ள இந்தியர்களில் 14 விழுக்காட்டினர் உடல் பருமன் உள்ளவர்கள்

-- (தேசிய மக்கள்தொகைச் சுகாதாரக் கருத்தாய்வு, 2019)

சிங்கப்பூர் இந்தியர்களிடையே 14.2 விழுக்காட்டினருக்கு நீரிழிவு நோய் உள்ளது.

இந்தியர்களிடையே நீரிழிவு நோய், உடல் பருமன் ஆகியவை அதிகம் காணப்படுவதற்குச் சில பொதுவான காரணங்கள் உள்ளன.

  • சத்துள்ள உணவை உண்ணாதது
  • உடற்பயிற்சி செய்யாதது
  • தாமதமாக இரவு உணவை உண்பது
  • உணவு நேரங்களுக்கு இடையில் சிற்றுண்டி வகைகளை உண்பது
  • அதிக மாவுச்சத்துள்ள உணவை உண்பது

அதிக மாவுச்சத்து உள்ள (Carbohydrate) உணவுகளை உண்பதால் உடல் பருமன் ஆகலாம்.

உடல் பருமன் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கக்கூடியது.

நீரிழிவு நோயைத் தவிர்க்க அல்லது கட்டுப்படுத்த உதவும் சில வழிகள்?

  • ஆரோக்கியத்தைக் கடைப்பிடித்தல்
  • ஆட்டிறைச்சி போன்றவற்றைத் தவிர்த்து, lean meat என்றழைக்கப்படும் கொழுப்புச்சத்து குறைந்த இறைச்சி வகை, மீன் போன்றவற்றை உண்ணுதல்
  • பாரம்பரிய இந்திய உணவுப் பொருள்களில் உள்ள பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளுதல் (அவற்றில் மாவுச்சத்தின் அளவு குறைவு, கொழுப்புச் சத்து இல்லை, அதிக நார்ச்சத்து உள்ளது)
  • 9.25 அங்குல நீளம் கொண்ட தட்டில் உணவைச் சாப்பிடுதல். (அதில் முக்கால் அளவு முழுவகை தானியம், முக்கால் அளவு புரதச்சத்து கொண்ட உணவுவகை, பாதியளவு காய்கறி ஆகியவற்றைச் சேர்த்துக்கொண்டு சாப்பிடுவதைப் பழக்கமாக்கலாம்.)
  • ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும். நாளுக்கு 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்ய முயலுங்கள்!

எனப் பல்வேறு எளிய வழிகளில் சத்துள்ள, வளமான வாழ்க்கை வாழ டாக்டர் கல்பனா பரிந்துரைத்துள்ளார்.

அதன் படி சில மாற்றங்களை வாழ்க்கையில் கொண்டுவந்து, உடல் பருமன், நீரிழிவு நோய் ஆகியவற்றைத் தவிர்த்து அல்லது கட்டுப்படுத்தி, சிறப்பான வாழ்க்கை வாழ முனைவோம்!  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்