Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

2022இல் ஒரு மில்லியன் ஓவியங்கள் முதல்முறையாக ஏலத்திற்கு விடப்பட்டன

வாசிப்புநேரம் -
சென்ற ஆண்டு சுமார் ஒரு மில்லியன் கலைப் படைப்புகள் முதல்முறையாக ஏலத்திற்கு விடப்பட்டன.

அவற்றில் இதுவரை இல்லாத அளவு கிட்டத்தட்ட 705,000 விற்கப்பட்டன.

அதன் மூலம் கிடைத்த வருமானம்? 16.5 பில்லியன் டாலர்.

2021ஆம் ஆண்டை (17 பில்லியன் டாலர்) விட அது சற்றுக் குறைவு.

எனினும் சென்ற ஆண்டு ஓவியங்களைச் சொந்தமாக்கிக்கொள்வதற்கான போட்டி கடுமையாக இருந்ததாகக் கூறப்பட்டது.

வருமானம் குறைந்ததற்குக் கிருமிப்பரவலால் சீனச் சந்தை மெதுவடைந்ததே காரணம்.

உலகப் பொருளியல் நிலவரம் நிச்சயமற்றதாக இருந்த போதும் கலை அதற்கு விதிவிலக்குப் போன்று தெரிகிறது.

ஆக அதிக வருவாய் ஈட்டிய கலைப்படைப்புகள்?

பிக்காஸோ வரைந்தவை (Picasso)...

அவரின் கலைப்படைப்புகள் மட்டும் சென்ற ஆண்டு 494 மில்லியன் டாலரை ஈட்டின.

எந்த நாட்டைச் சேர்ந்தோர் ஆக அதிகக் கலைப்படைப்புகளை வாங்கினர்?

🎨அமெரிக்கா (7.3 பில்லியன் டாலர்)

🖌️ சீனா (3.9 பில்லியன் டாலர்)

🎨பிரிட்டன் (2.1 பில்லியன் டாலர்)

🖌️ பிரான்ஸ் (2.1 பில்லியன் டாலர்)
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்